நாள் : 27-12-2020 |
நேரம் : 6 PM to 9 PM |
இடம் : இணையதளம் (Internet) |
தமிழ்மொழி பண்பாட்டு கழகம், சிங்கப்பூர் அன்பு மாணவர்களே! பெற்றோரே! தங்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தனது ஔவையார் விழா, திருக்குறள் விழா, பாரதியார் விழா ஆகிய மூன்று விழாக்களை உள்ளடக்கிய முக்கவி விழாவை ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது. கழகம், மூன்று விழாக்கள் தொடர்பான போட்டிகளை இணையம் வழியே நடத்த விரும்புகிறது. அப்போட்டிகள் பாலர் பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. இங்கு, பாரதியார் விழாப் போட்டிகள் பற்றிய விரிவான விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அறியுமாறும் ஆதரவு தெரிவிக்குமாறும் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து, போட்டிகளுக்கான தொடர்பு அதிகாரி புலவர் தீ விஜய சுதாவுடன் தொலைபேசி எண் +65 9198 4370இல் அல்லது mukkavijc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. போட்டிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குமாறு கழகம் தங்களை வேண்டிக்கொள்கிறது. இப்போது போட்டிகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம். 1. பாரதியார் விழா - போட்டிகள் தொடக்கக் கல்லூரி / மிலேனியா கல்வி நிலையப் புகுமுகவகுப்பு மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி இந்தப் போட்டியில் புகுமுக வகுப்புகளில் பயிலும் தொடக்கக்கல்லூரிகள், மிலேனியா கல்வி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம். புகுமுக வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பொருத்தமான பாரதியார் பாடலை அல்லது பாரதியார் பாடலின் அடிகளைக் கொண்டு சிங்கப்பூருக்குப் பொருத்தமான முறையில் இளையர் வாழ்க்கை தொடர்பான சிறுகதைகளை எழுதி அனுப்பலாம். கதைகளை, A4 தாளில் 3 முதல் 5 பக்கங்கள் வரை எழுதி அல்லது தட்டச்சுச் செய்து அனுப்பலாம். மொத்தம் 25 பேர் இப்போட்டியில் பங்கேற்க இயலும். சில குறிப்புகள்:
மிக்க நன்றி, வணக்கம். திரு மு. ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டு கழகம், சிங்கப்பூர். குறிப்பு: போட்டிகளுக்கான பதிவுத்தாள் விவரங்களைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில் https://www.tamilmozhi.org/ இடம்பெற்றுள்ள இணைப்பில் https://form.jotform.com/203317859258464 பெறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். |