நாள் : 27-12-2020 |
நேரம் : 6 PM to 9 PM |
இடம் : இணையதளம் (Internet) |
தமிழ்மொழி பண்பாட்டு கழகம், சிங்கப்பூர் அன்பு மாணவர்களே! பெற்றோரே! தங்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் இம்மாதம் தொடங்கி, வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6மணிக்குத் தனது ஔவையார் விழா, திருக்குறள் விழா, பாரதியார் விழா ஆகிய மூன்று விழாக்களை உள்ளடக்கிய முக்கவி விழாவை ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது. மூன்று விழாக்கள் தொடர்பான போட்டிகளை இணையம் வழியே நடத்த விரும்புகிறது. அப்போட்டிகள் பாலர் பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. இங்கு திருக்குறள் விழாப் போட்டிகள் பற்றிய விரிவான விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அறியுமாறும் ஆதரவு தெரிவிக்குமாறும் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டிகளுக்கான தொடர்பு அதிகாரி திருமதி சுகுணாவுடன் +65 9029 1535 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது mukkavisec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வழியே தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. போட்டிகளுக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குமாறு கழகம் வேண்டிக்கொள்கிறது. இப்போது போட்டிகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம். 1. திருக்குறள் விழா - போட்டிகள் : திருக்குறள் விழாப்போட்டிகளை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்துவது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அவ்வகையில் பதின்ம வயது மாணவர்கள் தொடர்பான கருக்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து அதை ஒரு திருக்குறளை மையமாக வைத்து மாணவர்கள் இருவர் உரையாடல் நடத்தும்வகையில் போட்டியை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். கீழ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டி: “பதின்ம வயதின் ஆரம்பத்தில் நாம்” - இணையாக உரையாடும் போட்டி ஒவ்வொரு பள்ளியிலும் கீழ் உயர்நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்களது படைப்புகளை உரையாடலாகப் பேச்சுத்தமிழில் வழங்க வேண்டும். பதின்ம வயதின் ஆரம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் அவ்வயது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இடம்பெறும் அந்த உரையாடலில் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றில் இடம்பெறும் திருக்குறள்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இங்கு விரிவான முறையில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு அவர்களது உரையாடல் இடம் பெறலாம். ஒரு குழுவில் உள்ள இருவரும் இணைந்து ஒரு பதிவுத்தாளை மட்டும் அனுப்ப வேண்டும். மேல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டி: “பதின்மவயதும் நாமும்” - இணையாக உரையாடும் போட்டி ஒவ்வொரு பள்ளியிலும் மேல் உயர்நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்களது படைப்புகளை உரையாடலாகப் பேச்சுத்தமிழில் வழங்க வேண்டும். பதின்மவயதின் ஒரு பகுதியைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் பதின்மவயதுப் பயணம் தொடர்பான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இடம்பெறும் அந்த உரையாடலில் அறத்துப்பால், பொருட்பால் தொடர்பான திருக்குறள்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம். இங்கு விரிவான முறையில் 5 முதல் 6 நிமிடங்களுக்கு அவர்களது உரையாடல் இடம் பெறலாம். ஒரு குழுவில் உள்ள இருவரும் இணைந்து ஒரு பதிவுத்தாளை மட்டும் அனுப்ப வேண்டும்.
மிக்க நன்றி, வணக்கம். திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர். குறிப்பு: போட்டிகளுக்கான பதிவுத்தாள் விவரங்களைத் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில்https://www.tamilmozhi.org/ பெறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். கீழ் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் - https://form.jotform.com/203317871992463 மேல் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் - https://form.jotform.com/203318455402448 |