நாள் : 25-07-2021 | ||||||||||||||||||||
நேரம் : 9 AM to 3 PM | ||||||||||||||||||||
இடம் : ZOOM இணையம் | ||||||||||||||||||||
மழலையர் வகுப்பு (Nursery), பாலர் வகுப்பு ஒன்றைச் (Kindergarten 1) சேர்ந்த மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி பாலர் பள்ளி இரண்டாம் (Kindergarten 2) வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் கதை சொல்லும் போட்டியும் தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டி தொடக்கநிலை 3, 4 (Primary 3 & 4) வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்கள் தொடர்பான திரையில் ஒரு சொல்!, கதை சொல்லுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றல் தொடக்கநிலை 5, 6 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ‘ஔவையாரின் பாடலும் இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களும்’ என்ற தலைப்பில் இணையாகக் கலந்துரையாடும் போட்டி
மழலையர் வகுப்பு (Nursery), பாலர் வகுப்பு ஒன்றைச்(Kindergarten 1) சேர்ந்த மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
மழலையர் வகுப்பு, (Nursery) பாலர் வகுப்பு ஒன்று (Kindergarten 1) ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குத் தரப்படவுள்ள படத்தை வண்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டும். பிறகு அதை ஸ்கேன் செய்து அல்லது புகைப்படம் எடுத்து மின்னஞ்சல் வழியே போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். பொருத்தமான முறையில் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, அழகாக வண்ணம் தீட்டுதல், தரப்பட்ட படத்துக்குத் தம் வண்ணம் தீட்டுவதன் வழியே அதனை ஒரு கலைப்படைப்பாக உருவாக்குதல் ஆகியன மதிப்பீட்டின்போது கவனத்தில் கொள்ளப்படும். போட்டிக்கான விதிமுறைகள்
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி லலிதா (Mrs Lalitha) அவர்களைத் தொலைபேசி எண் +65 90604464 இலும் திருமதி இராஜகுமாரி (Mrs Rajakumari) அவர்களைத் தொலைபேசி எண் +65 90036036 இலும் avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. பாலர் பள்ளி இரண்டாம் (Kindergarten 2) வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் கதை சொல்லும் போட்டியும்
போட்டி ஒன்று: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பில் (Kindergarten 2) படிக்கும் மாணவர்கள் பின்வரும் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும். இரண்டாம் போட்டி: கதை சொல்லும் போட்டி இங்கே இடம்பெற்றுள்ள 13 பாடல்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து அதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையைப் பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டும். கதையைச் சொல்லும்போது மாணவர்கள் உரிய முறையில் சரியாக உச்சரித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் கதையைச் சொல்லுதல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் கதையைச் சொல்லுதல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும். போட்டிக்கான விதிமுறைகள்
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி லலிதா (Mrs Lalitha) அவர்களைத் தொலைபேசி எண் +65 90604464 இலும் திருமதி இராஜகுமாரி (Mrs Rajakumari) அவர்களைத் தொலைபேசி எண் +65 90036036 இலும் avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. ஔவையாரின் ஆத்திசூடி
தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டிதொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
பொதுவாக ஔவையாரின் பாடல்களுக்குப் பல நூல்களில் பலவகைகளில் பொருள்கள் தரப்பட்டிருக்கும். பொருத்தமான முறையில் ஒவ்வொரு பாடலுக்கும் அதிகபட்சம் இரண்டு வாக்கியங்களில் பொருள் இருக்குமாறு தயவு செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு, தங்களுக்கு உதவியாகப் பாடல்களுக்குப் பொருள்கள் தரப்பட்டுள்ளன. தாங்கள் விருப்பப்பட்டால் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை. பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் நன்கு மனனம் செய்தல், கேட்பவர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்சரிப்புடன் குரல் ஏற்ற இறக்கத்தோடு பொருத்தமான தொனியில் ஒப்பிப்பது ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும். போட்டிக்கான விதிமுறைகள்
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி லலிதா (Mrs Lalitha) அவர்களைத் தொலைபேசி எண் +65 90604464 இலும் திருமதி இராஜகுமாரி (Mrs Rajakumari) அவர்களைத் தொலைபேசி எண் +65 90036036 இலும் avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. ஆத்திசூடி- பாடலும் பொருளும் 1.கண்டு ஒன்று சொல்லேல் நாம் கண்ணால் பார்த்த ஒன்றிற்கு மாறாகப் பார்க்கத ஒன்றைப் பற்றிப் பேசக்கூடாது. அதாவது பொய் சொல்லக்கூடாது. 2.ஙப் போல் வளை 'ங' என்னும் தமிழ் எழுத்து, தன்னோடு சேர்ந்த எழுத்துகள் அதிகம் பயன்படாமல் இருந்தாலும் அவற்றையும் தன் உறவாக எண்ணி அணைத்துச் செல்வதுபோல நாமும் நம் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இவரால் என்ன பயன் என்று நினைக்காமல், அன்பாக இருந்து வாழ்க்கையை நடத்த வேண்டும். 3.சனி நீராடு வாரம் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு வார இறுதியில் தலையில் எண்ணையைக் குளிரத் தேய்த்து நீராடுவது உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சியைத் தரும். 4.ஞயம்பட உரை நாம் சொல்வதைக் கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும்படி நல்ல சொற்களைப் பொருத்தமாக, இனிமையாகப் பேச வேண்டும். 5.இடம்பட வீடு எடேல் நம்முடைய தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாமல் அளவோடு செலவிட்டுக் கச்சிதமாகக் கட்ட வேண்டும். 6.இணக்கம் அறிந்து இணங்கு ஒருவரிடம் தோழமை கொள்ளும் முன்பு, அவர் நல்ல குணங்களும், நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்துகொண்ட பிறகு அவருடன் தோழமை கொள்ள வேண்டும். 7.தந்தை தாய்ப் பேண் நம்முடைய தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் வைத்துக் காப்பாற்ற வேண்டும். 8.நன்றி மறவேல் ஒருவர் நமக்குச் செய்த உதவியை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. 9.பருவத்தே பயிர் செய் எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும். கல்வி கற்பதையும் கைத்தொழிலையும் அவ்வாறே இளம் வயதில் கற்றுக்கொள்ள வேண்டும். 10.இயல்பு அலாதன செய்யேல் நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களை நாம் எப்போதும் செய்யக்கூடாது. 11. வஞ்சகம் பேசேல் நாம் எப்போதும் உண்மைக்கு மாறான, அதே சமயம் கேட்பதற்கு மட்டும் இனிமையாக அமைந்திடும் வகையில் கவர்ச்சிகரமான சொற்களைப் பேசக்கூடாது. 12.இளமையில் கல் இளமைப் பருவத்திலிருந்து நாம் கற்கவேண்டிய அனைத்தையும் நாம் அதாவது இலக்கணத்தையும், கணிதத்தையும் தவறாமல் கற்றுக்கொள்ள வேண்டும். 13.அறனை மறவேல் நாம் தருமத்தை எப்போதும் மறவாமல் செய்ய வேண்டும். 14.கடிவது மற நமக்கும் பிறருக்கும் கோபத்தை உண்டாக்கக்கூடிய சொற்களை நாம் மறந்துவிட வேண்டும். அப்படியென்றால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 15.காப்பது விரதம் பிற உயிரினங்களுக்கு எவ்வகைத் துன்பத்தையும் தராமல் வாழ்வதே சிறந்த நோன்பு ஆகும். தொடக்கநிலை 3, 4 (Primary 3 & 4) வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்கள் தொடர்பான திரையில் ஒரு சொல்!, கதை சொல்லுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றல்
முதல் போட்டி: திரையில் ஒரு சொல்! தொடக்கநிலை 3,4 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்கள் தொடர்பான ‘திரையில் ஒரு சொல்!’ போட்டியில் பங்கேற்றுத் தம் பதில்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டும். இங்கு போட்டி, எளிமையான நிலையிலிருந்து நடுத்தரமான நிலை, சற்றுக்கடினமான நிலை என்ற முறையில் ஒருவரிப்பாடல், இரண்டு வரிப்பாடல், நான்குவரிப்பாடல் என்று அமைந்துள்ள பாடல்களைப்படித்து மனப்பாடம் செய்து பங்கேற்கும் வகையில் இடம்பெறும். மாணவர்கள், கொடுக்கப்பட்ட 60 வினாடிகளுக்குள் (ஒரு நிமிடத்திற்குள்) திரையில் தோன்றும் பாடல் பகுதிகளில் விடப்பட்டுள்ள பகுதிக்கு உரிய பதில் சொல்லைச் சொல்ல வேண்டும். வேகத்துடனும் விவேகத்துடனும் அவர்கள் சொல்லும் பதில்கள் அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும். கேள்விகளுக்கு ஏற்ற பதில் சொற்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லும்போது முழு மதிப்பெண்கள் தரப்படும். பதில் சொல்லைச் சொல்லும்போது, அந்தச் சொல்லின் கடைசி எழுத்தையோ, முதல் எழுத்தையோ அல்லது நடுவில் ஓரெழுத்தையோ விட்டுவிடும்போது அல்லது தெளிவாகச் சொல்லாதபோது பாதி மதிப்பெண்கள் தரப்படும். போட்டி இரண்டு: கதை சொல்லுதல் ‘திரையில் ஒரு சொல்!’ போட்டியைத் தொடர்ந்து, ஒருவரிப் பாடல், இரண்டு வரிப் பாடல்கள், நான்கு வரிப்பாடல்கள் ஆகியவற்றிலிருந்து ஏதேனும் ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து, அப்பாடலின் பொருளும், பாடலின் வழியே பெறப்படும் அறக்கருத்தும் வெளிப்படும்வகையில் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். கதையைச் சொல்வதற்கான அதிகபட்ச நேரம் 3 நிமிடங்கள். போட்டிக்கான விதிமுறைகள்
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி லலிதா (Mrs Lalitha) அவர்களைத் தொலைபேசி எண் +65 90604464 இலும் திருமதி இராஜகுமாரி (Mrs Rajakumari) அவர்களைத் தொலைபேசி எண் +65 90036036 இலும் avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் பின்வரும் பாடல்களைப் படித்து மனனம் (மனப்பாடம்) செய்து வரவேண்டும். எளிமையான பாடல்கள்
நடுத்தர நிலையிலான பாடல்கள்
கடினமான பாடல்கள்
தொடக்கநிலை 5, 6 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ‘ஔவையாரின் பாடலும் இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களும்’ என்ற தலைப்பில் இணையாகக் கலந்துரையாடும் போட்டி
இங்கு தொடக்கநிலை 5, 6ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியைச் சேர்ந்த சக மாணவருடன் இணைந்து ஔவையார் அருளிய நல்வழி, மூதுரை ஆகிய நூல்களிலிருந்து ஏதேனும் ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து, அப்பாடல் இன்றைய நிலையில் நமக்குள் இருபத்தோராம் நூற்றாண்டுத் திறன்களை வளர்க்கவும் சிறந்த சிங்கப்பூராக நாம் விளங்கவும் எவ்வாறு உதவியாக அல்லது அடிப்படையாக உள்ளது என்று ஒருவருக்கொருவர் கலந்துரையாட வேண்டும். மாணவர்கள், போட்டிக்குத் தயாராகும்போது, இங்கு இடம்பெற்றுள்ள பவர் பாயிண்ட் படவில்லையின் பின்னணியைப் https://bit.ly/35BkCH5 (Background)ப் பயன்படுத்தித் தங்களது பவர் பாயிண்ட் (Power Point) படவில்லைகளை உருவாக்க வேண்டும். பிறகு அவற்றின் உதவியோடு, தரமான பேச்சுத்தமிழில் தங்கள் இணையாளருடம் உரையாட வேண்டும். போட்டிக்குப் பயன்படுத்தப்படும் படவில்லைகளை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது. பொருத்தமான பாடலைத் தேர்வு செய்தல், பாடலுடன் பொருத்தமான இருபத்தோராம் நூற்றாண்டுத்திறனை அல்லது திறன்களை இணைத்துப் பேசுதல், சிங்கப்பூர்ப் பின்னணியில் பொருத்தமாகப் பேசுதல், பேச்சுத்தமிழைப் பயன்படுத்திப் பேசவேண்டிய முறையில் பேசுதல், பவர் பாயிண்ட் பட வில்லைகளைப் பயன்படுத்தி இணையாளரைப் பார்த்தபடி பேசுதல், தெளிவாக உச்சரித்தல், உரிய குரல் ஏற்ற இறக்கத்தோடு பேசுதல். பொருத்தமான உணர்ச்சியைப் பயன்படுத்திப் பேசுதல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும். போட்டிக்கான விதிமுறைகள்
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திருமதி லலிதா (Mrs Lalitha) அவர்களைத் தொலைபேசி எண் +65 90604464 இலும் திருமதி இராஜகுமாரி (Mrs Rajakumari) அவர்களைத் தொலைபேசி எண் +65 90036036 இலும் avvaiyarvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. குறிப்பு போட்டிக்கு வரும் மாணவர்கள் தங்களது இணைகளைத் தெரிவு செய்யும்போது, தொடக்கநிலை ஐந்து வகுப்பில் படிப்பவர்கள் தாமாக இணைந்து ஓர் இணையை உருவாக்கலாம் அல்லது தொடக்கநிலை ஆறு மாணவர்கள் தாங்களாக இணைந்து ஓர் இணையை உருவாக்கலாம் அல்லது தொடக்கநிலை ஐந்து, ஆறு ஆகிய இரண்டு வகுப்புகளிலும் படிக்கும் மாணவர்கள் தாங்களாக இணைந்து ஓர் இணையை உருவாக்கலாம். மிக்க நன்றி, வணக்கம். மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர். குறிப்பு: போட்டிகளுக்கான பதிவுத்தாள் விவரங்களைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில்https://www.tamilmozhi.org/ பெறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். மழலையர் வகுப்பு பாலர் வகுப்புகள் - https://form.jotform.com/211631564951455 பாலர் பள்ளி இரண்டாம் வகுப்புகள் - https://form.jotform.com/211684232633452 தொடக்கநிலை பள்ளி வகுப்புகள் 1, 2 - https://form.jotform.com/211691715921456 தொடக்கநிலை பள்ளி வகுப்புகள் 3, 4 - https://form.jotform.com/211684814278463 தொடக்கநிலை பள்ளி வகுப்புகள் 5, 6 - https://form.jotform.com/211631339283453 |