நிகழ்ச்சிகள்

Event Details

பாரதியார் விழா 2021
பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா போட்டிகள்

நுழைவு : அனுமதி இலவசம்...!
நாள் : 12-12-2021
நேரம் : 9 AM to 6 PM
இடம் : ZOOM இணையம்
மழலையர் வகுப்பு (Nursery), பாலர் வகுப்பு ஒன்று, (Kindergarten 1) பாலர் வகுப்பு இரண்டு (Kindergarten 2) ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் எனக்குப் பிடித்த பிராணி குறித்துப் பேச்சுத்தமிழில் பேச்சும் போட்டியும் தொடக்கநிலை ஒன்று, இரண்டு, மூன்று (Primary 1, 2 & 3) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் திரையில் ஒரு சொல் போட்டியும் தொடக்கநிலை நான்கு, ஐந்து, ஆறு (Primary 4, 5 & 6) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் கதை சொல்லும் போட்டி போட்டியும் உயர்நிலை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து (Secondary 1, 2, 3, 4 & 5) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாரதியாரின் வசன கவிதைகளை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் தெரிவு செய்யப்படும் தலைப்பில் பேசுதல் போட்டியும் தொடக்கக்கல்லூரி, மிலேனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான பாரதியின் வசன கவிதையை ஒப்பித்தல் போட்டியும் தெரிவு செய்யப்படும் தலைப்பில் பேசுதல் போட்டியும் பொதுமக்களுக்கான போட்டிகள்

மழலையர் வகுப்பு (Nursery), பாலர் வகுப்பு ஒன்று, (Kindergarten 1) பாலர் வகுப்பு இரண்டு (Kindergarten 2) ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் எனக்குப் பிடித்த பிராணி குறித்துப் பேச்சுத்தமிழில் பேச்சும் போட்டியும்.
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம் - https://us02web.zoom.us/j/84508960408
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/211631564951455
போட்டி நடைபெறும் நாள் : 12.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி ஒன்று: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு, பாலர் வகுப்பு 1, பாலர் வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட பாப்பாப் பாட்டின் வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள்வரை எடுத்துக்கொள்ளலாம். ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

பாப்பாப் பாட்டு :

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்கு
இரக்கப் படவேண்டும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை, ஆடு , -இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு!
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

போட்டி இரண்டு: எனக்குப் பிடித்த பிராணி

பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு, பாலர் வகுப்பு 1, பாலர் வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மேலே பார்த்த பாடலில் இடம் பெற்றுள்ள பசு, ஆடு, மாடு. நாய், குதிரை, குருவி, காகம் போன்றவற்றில் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பிராணி குறித்துப் பேச்சுத்தமிழில், இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குப் பேச வேண்டும். குறிப்பிட்டபிராணியை ஏன் தனக்குப்பிடித்திருக்கிறது என்று குழந்தைகள் சொல்லவேண்டும்.

மாணவர்கள் பேசும்போது, கேட்பவர்களைப் பார்த்து அவர்களுக்குப் பொருள் புரியும் வகையில் உணர்ச்சியுடன் பேசுவது, துணிச்சலுடன்பேசுவது ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  • பாப்பாப் பாட்டின் வரிகளை மனனம் செய்து ஒப்பிப்பதற்கும் எனக்குப் பிடித்த பிராணி குறித்துப் பேச்சுத்தமிழில் பேசுவதற்கும் சேர்த்து அதிகபட்ச நேரம் ஆறு (6) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து Mr Michael அவர்களைத்  தொலைபேசி எண் +65 9488 5627 இலும் Mr Sankar அவர்களைத் தொலைபேசி எண் +65 9139 3545 இலும் bharathiyarvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொடக்கநிலை ஒன்று, இரண்டு, மூன்று (Primary 1, 2 & 3) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் திரையில் ஒரு சொல் போட்டியும்

தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஔவையாரின் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

போட்டி பதிவுக்கான இறுதி நாள் : சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம் - https://us02web.zoom.us/j/84508960408
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/213153467815457
போட்டி நடைபெறும் நாள் : 12.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி ஒன்று: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

தொடக்கநிலை ஒன்று, இரண்டு, மூன்று (Primary 1, 2 & 3) வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பின்வரும் 1 முதல் 35 வரையிலான பாரதியாரின் ஆத்திசூடிப் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

35 ஆத்திசூடிச் செய்யுள்கள்

  1. அச்சம் தவிர்
  2. ஆண்மை தவறேல்
  3. இளைத்தல் இகழ்ச்சி
  4. ஈகை திறன்
  5. உடலினை உறுதி செய்
  6. ஊண்மிக விரும்பு
  7. எண்ணுவது உயர்வு
  8. ஏறு போல் நட
  9. ஐம்பொறி ஆட்சி கொள்
  10. ஒற்றுமை வலியமாம்
  11. ஓய்தல் ஒழி
  12. ஔடதம் குறை
  13. கற்ற தொழுகு
  14. காலம் அழியேல்
  15. கிளைபல தாங்கேல்
  16. கீழோர்க்கு அஞ்சேல்
  17. குன்றேன நிமிர்ந்து நில்
  18. கூடித் தொழில் செய்
  19. கெடுப்பது சோர்வு
  20. கேட்டிலும் துணிந்து நில்
  21. வறுமையிலும் தைரியமாக இரு
  22. கைத்தொழில் போற்று
  23. கொடுமையை எதிர்த்து நில்
  24. கோல்கைக் கொண்டு வாழ்
  25. கவ்வியதை விடேல்
  26. சரித்திர தேர்ச்சி கொள்
  27. சிதையா நெஞ்சு கொள்.
  28. சீறுவோர்ச் சீறு
  29. சுமையினுக்கு இளைத்திடேல்
  30. சூரரைப் போற்று
  31. செய்வது துணிந்து செய்
  32. சேர்க்கை அழியேல்
  33. சைகையிற் பொருளுணர்
  34. சொல்வது தெளிந்து சொல்
  35. சௌரியந் தவறேல்

இரண்டாம் போட்டி: திரையில் ஒரு சொல்!

தொடக்கநிலை 1,2,3 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பாரதியாரின் ஆத்திசூடியில் உள்ள முதல் 10 பாடல்கள் தொடர்பான ‘திரையில் ஒரு சொல்!’ போட்டியில் பங்கேற்றுத் தம் பதில்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டும்.

இங்கு போட்டி, எளிமையான நிலையிலிருந்து நடுத்தரமான நிலை, சற்றுக்கடினமான நிலை என்ற முறையில் கோடிட்ட இடத்தில் வரவேண்டிய ஒரு சொல், கோடிட்ட இடங்களில் வரவேண்டிய இரண்டு சொற்கள், பாடலின் முதலில் வர வேண்டிய சொல், பாடலின் இடையில் வரவேண்டிய சொல் பாடலின் இறுதியில் வரும் சொல் எனக் கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப உரிய பதில்களைக் கூற வேண்டும். எனவே, மாணவர்கள் பாடல்களைப்படித்து மனப்பாடம் செய்து பங்கேற்கும் வகையில் இப்போட்டி இடம்பெறும்.

மாணவர்கள், கொடுக்கப்பட்ட 60 வினாடிகளுக்குள் (ஒரு நிமிடத்திற்குள்) திரையில் தோன்றும் 1 முதல் 10 பாடல்களுக்குள் இடம்பெறும் கோடிட்ட இடங்களில் வரவேண்டிய உரிய பதில் சொல்லைச் சொல்ல வேண்டும். வேகத்துடனும் விவேகத்துடனும் அவர்கள் சொல்லும் பதில்கள் அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும்.

கேள்விகளுக்கு ஏற்ற பதில் சொற்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லும்போது முழு மதிப்பெண்கள் தரப்படும். பதில் சொல்லைச் சொல்லும்போது, அந்தச் சொல்லின் கடைசி எழுத்தையோ, முதல் எழுத்தையோ அல்லது நடுவில் ஓரெழுத்தையோ விட்டுவிடும்போது அல்லது தெளிவாகச் சொல்லாதபோது பாதி மதிப்பெண்கள் தரப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

  • பாடல்களை ஒப்பிப்பதற்கும் ‘திரையில் ஒரு சொல்’ போட்டியில் பங்கேற்றுப் பதில் சொல்வதற்கும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச நேரம் ஆறு (6) நிமிடங்கள்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  • ஒரு பள்ளியிலிருந்து மொத்தம் பத்துப்பேர் வரை பங்கேற்கலாம்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து Mr Michael அவர்களைத்  தொலைபேசி எண் +65 9488 5627 இலும் Mr Sankar அவர்களைத் தொலைபேசி எண் +65 9139 3545 இலும் bharathiyarvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொடக்கநிலை நான்கு, ஐந்து, ஆறு (Primary 4, 5 & 6) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் கதை சொல்லும் போட்டி போட்டியும்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம் - https://us02web.zoom.us/j/84508960408
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/213153734053448
போட்டி நடைபெறும் நாள் : 12.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி ஒன்று: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி

இப்போட்டியில் தொடக்கநிலை நான்கு, ஐந்து, ஆறு (Primary 4, 5 & 6) ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட பாரதியாரின் ஆத்திசூடிப் பாடல்கள் 50ஐயும் மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள்வரை எடுத்துக்கொள்ளலாம். ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

50 ஆத்திசூடிச் செய்யுள்கள்

  1. அச்சம் தவிர்
  2. ஆண்மை தவறேல்
  3. இளைத்தல் இகழ்ச்சி
  4. ஈகை திறன்
  5. உடலினை உறுதி செய்
  6. ஊண்மிக விரும்பு
  7. எண்ணுவது உயர்வு
  8. ஏறு போல் நட
  9. ஐம்பொறி ஆட்சி கொள்
  10. ஒற்றுமை வலியமாம்
  11. ஓய்தல் ஒழி
  12. ஔடதம் குறை
  13. கற்ற தொழுகு
  14. காலம் அழியேல்
  15. கிளைபல தாங்கேல்
  16. கீழோர்க்கு அஞ்சேல்
  17. குன்றேன நிமிர்ந்து நில்
  18. கூடித் தொழில் செய்
  19. கெடுப்பது சோர்வு
  20. கேட்டிலும் துணிந்து நில்
  21. வறுமையிலும் தைரியமாக இரு
  22. கைத்தொழில் போற்று
  23. கொடுமையை எதிர்த்து நில்
  24. கோல்கைக் கொண்டு வாழ்
  25. கவ்வியதை விடேல்
  26. சரித்திர தேர்ச்சி கொள்
  27. சிதையா நெஞ்சு கொள்
  28. சீறுவோர்ச் சீறு
  29. சுமையினுக்கு இளைத்திடேல்
  30. சூரரைப் போற்று
  31. செய்வது துணிந்து செய்
  32. சேர்க்கை அழியேல்
  33. சைகையிற் பொருளுணர்
  34. சொல்வது தெளிந்து சொல்
  35. சௌரியந் தவறேல்
  36. ஞமிலி போல் வாழேல்
  37. ஞாயிறு போற்று
  38. ஞிமிரென இன்புறு
  39. ஞெகிழ்வத தருளின்
  40. ஞேயங் காத்தல் செய்
  41. தன்மை இழவேல்
  42. தாழ்ந்து நடவேல்
  43. திருவினை வென்று வாழ்
  44. தீயோர்க்கு அஞ்சேல்
  45. துன்பம் மறந்திடு
  46. தூற்றுதல் ஒழி
  47. தெய்வம் நீ என்று உணர்
  48. தேசத்தைக் காத்தல் செய்
  49. தையலை உயர்வு செய்
  50. தொன்மைக்கு அஞ்சேல்

இரண்டாம் போட்டி: கதை சொல்லும் போட்டி

தொடக்கநிலை 4,5,6 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பாரதியாரின் ஆத்திசூடியில் உள்ள முதல் 10 பாடல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை அடிப்படையாக் கொண்ட கதை ஒன்றை உருவாக்கிப் பேச்சுத்தமிழில் சொல்ல வேண்டும். இதற்கு மூன்று (3) நிமிடங்களை எடுத்துக்கொள்ளலாம்.

கதையைச் சொல்லும்போது மாணவர்கள் பேச்சுத்தமிழில் சொல்லுதல், உரிய முறையில் சரியாக உச்சரித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் கதையைச் சொல்லுதல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் கதையைச் சொல்லுதல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கும், கதையைச் சொல்வதற்கும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச நேரம் ஆறு (6) நிமிடங்கள்.
  • ஒரு பள்ளியிலிருந்து மொத்தம் பத்துப்பேர் வரை பங்கேற்கலாம்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து Mr Michael அவர்களைத்  தொலைபேசி எண் +65 9488 5627 இலும் Mr Sankar அவர்களைத் தொலைபேசி எண் +65 9139 3545 இலும் bharathiyarvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

உயர்நிலை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து (Secondary 1, 2, 3, 4 & 5) வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாரதியாரின் வசன கவிதைகளை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் தெரிவு செய்யப்படும் தலைப்பில் பேசுதல் போட்டியும்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம் - https://us02web.zoom.us/j/84508960408
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/213153397574461
போட்டி நடைபெறும் நாள் : 12.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி ஒன்று: பாரதியாரின் வசன கவிதைகளை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி:

உயர்நிலை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து (Secondary 1, 2, 3, 4 & 5) ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பாரதியாரின் வசனகவிதையை மனனம் செய்து துணிவுடன் பேசுவதுபோல ஒப்பிக்க வேண்டும். போட்டிக்கான வசனகவிதை இங்கே தரப்பட்டுள்ளது.

போட்டிக்கான குறைந்தபட்ச நேரம் மூன்று (3) நிமிடங்களாகவும் அதிகபட்ச நேரம் நான்கு (4) நிமிடங்களாகவும் இருக்கும்.

நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

வசனகவிதை : காற்று

காற்றே, வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்துவிடாதே.
காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தங்களைக் கீழே தள்ளிவிடாதே.
பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய்.
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலி யிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை
பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம் -- இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து
நொறுக்கிவிடுவான்.
சொன்னாலும் கேட்கமாட்டான்.
ஆதலால், மானிடரே வாருங்கள்.
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதிசெய்வோம்.
இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத்
தோழனாகிவிடுவான்.
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்;
வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்.
எற்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோதுகிற சக்தி,
சுழற்றுவது, ஊதுவது.
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்.
சக்தியின் கலைகளையே தெய்வங்க ளென்கின்றோம்.
காற்று சக்தி குமாரன்.
அவனை வழிபடுகின்றோம்.

காக்கை பறந்து செல்லுகிறது;
காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது.
அலைகள்போலிருந்து, மேலே காக்கை நீந்திச்செல்வதற்கு
இடமாகும் பொருள் யாது? காற்று.
அன்று, அஃதன்று காற்று;
அது காற்றின் இடம். வாயு நிலயம்.
கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்
தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து
மோதுகின்றன.
அத்தூள்களைக் காற்றென்பது உலகவழக்கு.
அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர்.
பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது.
நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகிவிடுகிறது.

தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது.
அத் திரவத்திலே சூடேற்றினால், ‘வாயு’ வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் ‘வாயு’
நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம்.
இந்த ‘வாயு’ பௌதிகத் தூள்.
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத்தேவ
னென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்துசெல்லும் வழி காற்று.
அந்த வழியை இயக்குபவன் காற்று.
அதனை அவ்வழியிலே தூண்டிச்செல்பவன் காற்று.
அவனை வணங்குகின்றோம்.
உயிரைச் சரணடைகின்றோம்.

காற்றை நம்மால் புகழமுடியாது, காற்றை வணங்குகிறோம். காற்றின் செயல்களை வழிபடுகிறோம்.

இரண்டாம் போட்டி: தெரிவு செய்யப்படும் தலைப்பில் பேசுதல்

மாணவர்கள் இங்குத் தரப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளில் பேசுவதற்குத் தயாராக வர வேண்டும். நீதிபதிகள் தெரிவு செய்யும் தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்களுக்குப் பேச்சுத்தமிழில் பேச வேண்டும்.

ஒவ்வொரு தலைப்பிலும் தங்கள் கருத்துகளைப் பகிரும்வகையில் 10 படவில்லைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். படவில்லைகளில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள எழுத்துத்தமிழைப் பயன்படுத்த வேண்டும்.

பார்வையாளர்களைப் பார்த்துத் தரப்பட்ட தலைப்பில் பொருத்தமான கருத்துகளைப் பேசுதல், தன்னம்பிக்கையுடன் துணிவோடு பேசுதல், உரிய குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், கேட்பவர் புரிந்துகொள்ளும்வகையில் உரிய வேகத்துடனும் உணர்ச்சியுடனும் பேசுதல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

தலைப்புகள் வருமாறு :

  1. பாரதியாரை எனக்கு ஏன் பிடிக்கும்?
  2. சிங்கப்பூரும் பாரதியும்

போட்டிக்கான விதிமுறைகள் :

  • வசன கவிதையை ஒப்பிப்பதற்கும், கதையைச் சொல்வதற்கும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச நேரம் ஒன்பது (9) நிமிடங்கள்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  • பாடல்களை ஒப்பிப்பதற்கும், கதையைச் சொல்வதற்கும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச நேரம் ஆறு (6) நிமிடங்கள்.
  • ஒரு பள்ளியிலிருந்து மொத்தம் பத்துப்பேர் வரை பங்கேற்கலாம்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து Mr Michael அவர்களைத்  தொலைபேசி எண் +65 9488 5627 இலும் Mr Sankar அவர்களைத் தொலைபேசி எண் +65 9139 3545 இலும் bharathiyarvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொடக்கக்கல்லூரி, மிலேனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான பாரதியின் வசன கவிதையை ஒப்பித்தல் போட்டியும் தெரிவு செய்யப்படும் தலைப்பில் பேசுதல் போட்டியும்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம் - https://us02web.zoom.us/j/84508960408
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/213162296223450
போட்டி நடைபெறும் நாள் : 12.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி ஒன்று: பாரதியின் வசன கவிதையை ஒப்பித்தல்

இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கொண்ட வசன கவிதையை, மனனம் செய்து துணிவுடன் பேசுவதுபோல ஒப்பிக்க வேண்டும்.

போட்டிக்கான குறைந்தபட்ச நேரம் மூன்று (3) நிமிடங்களாகவும் அதிகபட்ச நேரம் நான்கு (4) நிமிடங்களாகவும் இருக்கும்.

பின்வரும் பாரதியின் வசன கவிதையை உணர்ச்சியுடன் உரிய குரல் ஏற்ற இறக்கத்துடன் ஒப்பிக்க வேண்டும். நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

பாரதியார் கவிதை: காட்சி:

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.

ஞாயிறு நன்று;திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.

கடல் இனிது, மலை இனிது காடு நன்று. ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.

பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை, நீர் வாழ்வனவும் நல்லன.

மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.

உயிர் நன்று. . .

உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது.மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.

மனம் தெய்வம். சித்தம் தெய்வம். உயிர் தெய்வம். காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்று, தீ, வான், ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் - எல்லாம் தெய்வங்கள்.

உலோகங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன, மனிதர் - இவை அமுதங்கள்.

இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு – இவை bனைத்தும் ஒன்றே.

ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலை யருவி, குழல், கோமேதகம், - இவ் அனைத்தும் ஒன்றே.

இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி, இஃதெல்லாம் ஒன்று.

மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி - இவை ஒரு பொருள்.

வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் - இவை ஒரு பொருளின் பல தோற்றம்.

உள்ள தெல்லாம் ஒரே பொருள்; ஒன்று.

இந்த ஒன்றின் பெயர், ‘தான்’; ‘தானே’; தெய்வம், ‘தான்’ அமுதம், இறவாதது.

எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாத லுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்ப மாகுக.

தெய்வங்களை வாழ்த்துகின்றோம்.தெய்வங்கள் இன்ப
மெய்துக. அவை வாழ்க. அவை வெல்க. தெய்வங்களே!

என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்; என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர்.
எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று தெய்வங்களே!

எம்மை உண்பீர், எமக்கு உண வாவீர், உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்.
உமக்கு நன்று. தெய்வங்களே!

காத்தல் இனிது, காக்கப் படுவதும் இனிது. அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று.உண்பது நன்று,உண்ணப் படுதலும் நன்று. சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று,

உணர்வே நீ வாழ்க.நீ ஒன்று, நீ ஒளி. நீ ஒன்று, நீ பல. நீ நட்பு, நீ பகை. உள்ளதும், இல்லாததும் நீ. அறிவதும் அறியாததும் நீ. நன்றும், தீதும் நீ, நீ அமுதம், நீ சுவை. நீ நன்று. நீ இன்பம்.

இரண்டாம் போட்டி: தெரிவு செய்யப்படும் தலைப்பில் பேசுதல்:

மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள இரண்டு தலைப்புகளிலும் பேசுவதற்குத் தயாராக வரவேண்டும். நீதிபதிகள் தெரிவு செய்யும் தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்களுக்குப் பேச்சுத்தமிழில் பேச வேண்டும்.

பார்வையாளர்களைப் பார்த்துத் தரப்பட்ட தலைப்பில் பொருத்தமான கருத்துகளைப் பேசுதல், தன்னம்பிக்கையுடன் துணிவோடு பேசுதல், உரிய குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், கேட்பவர் புரிந்துகொள்ளும்வகையில் உரிய வேகத்துடனும் உணர்ச்சியுடனும் பேசுதல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

தமது பேச்சுக்கு ஏற்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிரும்வகையில் 10 படவில்லைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். படவில்லைகளில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள எழுத்துத்தமிழைப் பயன்படுத்த வேண்டும்.

தலைப்புகள் வருமாறு:

  1. பாரதியாரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பும் நற்குணங்கள்.
  2. பாரதியுடன் நான் பேச விரும்பும் செய்திகள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

  • வசன கவிதையை ஒப்பிப்பதற்கும், கதையைச் சொல்வதற்கும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச நேரம் ஒன்பது (9) நிமிடங்கள்.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59மணிக்குள்.
  • ஒரு தொடக்கக்கல்லூரி அல்லது மிலேனியாக் கல்வி நிலையத்திலிருந்து மொத்தம் பத்துப்பேர் வரை பங்கேற்கலாம்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தாங்கள் பயிலும் தொடக்கக்கல்லூரியின் அல்லது மிலேனியாக் கல்வி நிலையத்தின் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து Mr Michael அவர்களைத்  தொலைபேசி எண் +65 9488 5627 இலும் Mr Sankar அவர்களைத் தொலைபேசி எண் +65 9139 3545 இலும் bharathiyarvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

பொதுமக்களுக்கான போட்டிகள்

பொதுமக்களுக்கான இப்போட்டிகளில் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெற்றோர், இங்கு வேலை செய்வதற்கான முறையான அனுமதியை ( Employment Pass/ Work Permit) எழுத்துமூலமாகப் பெற்றுள்ளோரும் பங்கேற்கலாம்.

இங்கு மொத்தம் இரண்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.

போட்டி பதிவுக்கான இறுதி நாள் : சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம் - https://us02web.zoom.us/j/84508960408
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/213168685300454
போட்டி நடைபெறும் நாள் : 12.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

போட்டி ஒன்று: பாரதியாரும் நானும்

பாரதியார் என்றதும் உங்களுக்குத் தோன்றுவது என்ன? அல்லது யாவை? பாரதியாருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு யாது? அதாவது அவர் ஒரு வழிகாட்டியாக இருக்கிறாரா? நண்பராக இருக்கிறாரா? புரட்சியாளராகத் தெரிகிறாரா? பெண்மையைப் போற்றுபவராகத் தெரிகிறாரா? பாரதியார் உங்களுக்கு எப்படித்தெரிகிறார்? உங்கள் வாழ்வில் பாரதியின் பங்கு என்ன? என்பன குறித்துப் பேசும் போட்டி.

  • போட்டிக்கான குறைந்தபட்ச நேரம் 4 நிமிடங்கள்
  • போட்டிக்கான அதிகபட்ச நேரம் 5 நிமிடங்கள்
  • உங்கள் பேச்சைத் தரமான பேச்சுத்தமிழிலோ எழுத்துத்தமிழிலோ படைக்கலாம்.

போட்டி இரண்டு: தரப்பட்டுள்ள தலைப்புகளில் குறிப்பிட்ட தலைப்பில் பேசுதல்

  • பாரதியார் இன்று இங்கு வந்தால். . .
  • பாரதியாரும் நாட்டுப்பற்றும்

மேலே தரப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து 5 முதல் 6 நிமிடங்களுக்குள் என்ற தலைப்பில் ஓர் உரையைப் படைக்க வேண்டும்.

பார்வையாளர்களைப் பார்த்துத் தரப்பட்ட தலைப்பில் பொருத்தமான கருத்துகளைப் பேசுதல், தன்னம்பிக்கையுடன் துணிவோடு பேசுதல், உரிய குரல் ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், கேட்பவர் புரிந்துகொள்ளும்வகையில் உரிய வேகத்துடனும் உணர்ச்சியுடனும் பேசுதல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • நேரடியாகப் பேசும் உரைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச நேரம் பதினொன்று (11) நிமிடங்கள்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை சனிக்கிழமை 04 டிசம்பர் 2021 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து Mr Michael அவர்களைத்  தொலைபேசி எண் +65 9488 5627 இலும் Mr Sankar அவர்களைத் தொலைபேசி எண் +65 9139 3545 இலும் bharathiyarvizha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor