நாள் : 27-03-2022 | ||||||||||||||||||||||||||||||||||||
நேரம் : 9 AM to 3 PM | ||||||||||||||||||||||||||||||||||||
இடம் : ZOOM இணையம் | ||||||||||||||||||||||||||||||||||||
பாலர் வகுப்புகள் 1,2 ஆகியவற்றில் (Kindergarten 1,2) படிக்கும் மாணவர்களுக்கான திருக்குறள் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டி மழலையர் வகுப்புகள் 1,2 ஆகியவற்றில் (Nursery 1,2) படிக்கும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்களுகள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் திரையில் ஒரு சொல் போட்டியும்தொடக்கநிலை 3, 4 வகுப்புகளில் (Primary 3 & 4) பயிலும் மாணவர்களுகள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் திரையில் ஒரு சொல்லும் குறளும் போட்டியும்தொடக்கநிலை 5, 6 வகுப்புகளில் (Primary 5 & 6) பயிலும் மாணவர்களுகள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் ஒரு தலைப்பில் பேசும் போட்டியும் உயர்நிலை 1, 2 வகுப்புகளில் (Secondary 1 & 2) பயிலும் மாணவர்கள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பிக்கும் போட்டியும் குறும்படத்தைப் போட்டுக்காட்டிப் பேசும் போட்டியும் உயர்நிலை 3,4,5 வகுப்புகளில் (Secondary 3,4 & 5) பயிலும் மாணவர்கள் இருபது குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டியும் இணையாளருடன் பேசிக் காணொளியில் பதிவு செய்து போட்டுக்காட்டும் போட்டியும் தொடக்கக்கல்லூரிகளில் (Junior College Year 1 & Year 2) பயிலும் மாணவர்களுக்கும் மிலேனியா கல்வி நிலையத்தில் (Millennia Institute Year 1, Year 2 & Year 3) பயிலும் மாணவர்களுக்கும் இருபது குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டியும் இணையாளருடன் பேசிக் காணொளியில் பதிவு செய்து போட்டுக்காட்டும் போட்டியும் பொதுமக்களுக்கான போட்டிகள்
பாலர் வகுப்புகள் 1,2 ஆகியவற்றில் (Kindergarten 1,2) படிக்கும் மாணவர்களுக்கான திருக்குறள் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டி
திருக்குறள் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டி பாலர் வகுப்புகள் 1,2, (Kindergarten 1,2) ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் திருக்குறள் அறத்துப்பாலில் அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துத் திருக்குறள்களை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். நீங்கள் ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் 5 நிமிடங்கள். திருக்குறள்- பாடலும் பொருளும் (உரை மு வரதராசன்) அறன்வலியுறுத்தல் 1. சிறப்பீனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது? 2. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை. 3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். 4. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே. மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. 5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும். 6. அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். 7. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூற வேண்டா. 8. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன் ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும் 9. அறத்தான் வருவதே இன்பம்:மற் றெல்லாம் அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. 10. செயற்பாலது ஓரும் அறனே: ஒருவற்கு ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே; செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே. போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. மழலையர் வகுப்புகள் 1,2 ஆகியவற்றில் (Nursery 1,2) படிக்கும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
வண்ணம் தீட்டும் போட்டி மழலையர் வகுப்புகள் 1,2, (Nursery 1,2) ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குத் தரப்படவுள்ள படத்தை வண்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டும். பிறகு அதை ஸ்கேன் செய்து அல்லது புகைப்படம் எடுத்து மின்னஞ்சல் வழியே போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். பொருத்தமான முறையில் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, அழகாக வண்ணம் தீட்டுதல், தரப்பட்ட படத்துக்குத் தம் வண்ணம் தீட்டுவதன் வழியே அதனை ஒரு கலைப்படைப்பாக உருவாக்குதல் ஆகியன மதிப்பீட்டின்போது கவனத்தில் கொள்ளப்படும். போட்டிக்கான விதிமுறைகள்:
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்களுகள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் திரையில் ஒரு சொல் போட்டியும்
போட்டி ஒன்று: திருக்குறள்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி வான் சிறப்பு ( மு வரதராசனார் உரை) 1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும். 2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். 3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். 4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார். 5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். 6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. 7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். 8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. 9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும். 10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். திருக்குறள்களையும் அவற்றின் பொருளையும் நன்கு மனனம் செய்தல், கேட்பவர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்சரிப்புடன் குரல் ஏற்ற இறக்கத்தோடு பொருத்தமான தொனியில் ஒப்பிப்பது ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும் இரண்டாம் போட்டி: திரையில் ஒரு சொல்! தொடக்கநிலை 1,2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் திருக்குறளில் அறத்துப்பாலில், வான்சிறப்பு அதிகாரத்தில் உள்ள 10 குறள்கள் தொடர்பான ‘திரையில் ஒரு சொல்!’ போட்டியில் பங்கேற்றுத் தம் பதில்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டும். இங்கு போட்டி, எளிமையான நிலையிலிருந்து நடுத்தரமான நிலை, சற்றுக்கடினமான நிலை என்ற முறையில் கோடிட்ட இடத்தில் வரவேண்டிய ஒரு சொல், கோடிட்ட இடங்களில் வரவேண்டிய இரண்டு சொற்கள், குறளின் முதலில் வர வேண்டிய சொல், குறளின் இடையில் வரவேண்டிய சொல் குறளின் இறுதியில் வரும் சொல் எனக் கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப உரிய பதில்களைக் கூற வேண்டும். எனவே, மாணவர்கள் குறள்களைப்படித்து மனப்பாடம் செய்து பங்கேற்கும் வகையில் இப்போட்டி இடம்பெறும். மாணவர்கள், கொடுக்கப்பட்ட 60 வினாடிகளுக்குள் (ஒரு நிமிடத்திற்குள்) திரையில் தோன்றும் கோடிட்ட இடங்களில் வரவேண்டிய உரிய பதில் சொல்லைச் சொல்ல வேண்டும். வேகத்துடனும் விவேகத்துடனும் அவர்கள் சொல்லும் பதில்கள் அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும். கேள்விகளுக்கு ஏற்ற பதில் சொற்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லும்போது முழு மதிப்பெண்கள் தரப்படும். பதில் சொல்லைச் சொல்லும்போது, அந்தச் சொல்லின் கடைசி எழுத்தையோ, முதல் எழுத்தையோ அல்லது நடுவில் ஓரெழுத்தையோ விட்டுவிடும்போது அல்லது தெளிவாகச் சொல்லாதபோது பாதி மதிப்பெண்கள் தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. தொடக்கநிலை 3, 4 வகுப்புகளில் (Primary 3 & 4) பயிலும் மாணவர்களுகள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் திரையில் ஒரு சொல்லும் குறளும் போட்டியும்
போட்டி ஒன்று: திருக்குறள்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் திருக்குறளில் அறத்துப்பாலில் இருக்கின்ற ஊக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள பத்துத் திருக்குறள்களையும் பொருளுடன் படித்து மனனம் செய்து ஒப்பிக்கவும். உங்களுக்கான அதிகபட்ச நேரம் 6 நிமிடங்கள் ஊக்கமுடைமை 1. உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார் ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ? 2. உள்ளம் உடைமை உடைமை: பொருள்உடைமை ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும். 3. ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டேம் என்று கலங்க மாட்டார். 4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். 5. வெள்ளத்து அனைய மலர்நீட்டம்: மாந்தர்தம் நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு. 6. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்: மற்றுஅது எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. 7. சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார். 8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து ஊக்கம் இல்லாதவர், 'இவ்வுலகில் யாம் வண்மை உடையேம்' என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார். 9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். 10. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை: அஃதுஇல்லார் ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு. இரண்டாம் போட்டி: திரையில் ஒரு சொல்! திருக்குறள்களையும் அவற்றின் பொருளையும் நன்கு மனனம் செய்தல், கேட்பவர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்சரிப்புடன் குரல் ஏற்ற இறக்கத்தோடு பொருத்தமான தொனியில் ஒப்பிப்பது ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும் இதற்கான அதிகபட்ச நேரம் 6 நிமிடங்கள் தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் திருக்குறளில் ஊக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள 10 குறள்கள் தொடர்பான ‘திரையில் ஒரு சொல்லும் குறளும்!’ போட்டியில் பங்கேற்றுத் தம் பதில்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டும். இங்கு போட்டி, எளிமையான நிலையிலிருந்து நடுத்தரமான நிலை, சற்றுக்கடினமான நிலை என்ற முறையில் கோடிட்ட இடத்தில் வரவேண்டிய ஒரு சொல், கோடிட்ட இடங்களில் வரவேண்டிய இரண்டு சொற்கள், குறளின் முதலில் வர வேண்டிய சொல், பாடலின் இடையில் வரவேண்டிய சொல் பாடலின் இறுதியில் வரும் சொல் எனக் கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப உரிய பதில்களைக் கூற வேண்டும். எனவே, மாணவர்கள் குறள்களைப்படித்து மனப்பாடம் செய்து பங்கேற்கும் வகையில் இப்போட்டி இடம்பெறும். இதோ போல, ஒரு திருக்குறளில் சொற்கள் மாற்றித் தரப்பட்டிருக்கும். அச்சொற்களை ஒழுங்குபடுத்திக் குறளைச் சரியாகச் சொல் மாணவர்கள், கொடுக்கப்பட்ட 60 வினாடிகளுக்குள் (ஒரு நிமிடத்திற்குள்) திரையில் தோன்றும் 1 முதல் 10 பாடல்களுக்குள் இடம்பெறும் கோடிட்ட இடங்களில் வரவேண்டிய உரிய பதில் சொல்லைச் சொல்ல வேண்டும். வேகத்துடனும் விவேகத்துடனும் அவர்கள் சொல்லும் பதில்கள் அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும். கேள்விகளுக்கு ஏற்ற பதில் சொற்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லும்போது முழு மதிப்பெண்கள் தரப்படும். பதில் சொல்லைச் சொல்லும்போது, அந்தச் சொல்லின் கடைசி எழுத்தையோ, முதல் எழுத்தையோ அல்லது நடுவில் ஓரெழுத்தையோ விட்டுவிடும்போது அல்லது தெளிவாகச் சொல்லாதபோது பாதி மதிப்பெண்கள் தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. தொடக்கநிலை 5, 6 வகுப்புகளில் (Primary 5 & 6) பயிலும் மாணவர்களுகள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் ஒரு தலைப்பில் பேசும் போட்டியும்
தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் போட்டி ஒன்று: செய்ந்நன்றி அறிதல், கேள்வி இரண்டு அதிகாரங்களில் உள்ள இருபது குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் சேர்த்து ஒப்பித்தல். திருக்குறள்களையும் அவற்றின் பொருளையும் நன்கு மனனம் செய்தல், கேட்பவர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்சரிப்புடன் குரல் ஏற்ற இறக்கத்தோடு பொருத்தமான தொனியில் ஒப்பிப்பது ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும் இதற்கான அதிகபட்ச நேரம் 6 நிமிடங்கள் செய்ந்நன்றி அறிதல் 1. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. 2. காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும். 3. பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும். 4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். 5. உதவி வரைத்தன்று உதவி: உதவி கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். 6. மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது. 7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். 8. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும். 9. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த முன் உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும். 10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும். ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. கேள்வி 1. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். 2. செவிக்குண வில்லாத போழ்து சிறிது செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். 3. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். 4. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும். அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். 5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும். 6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும். கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். 7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்து நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். 8. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. 9. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது. 10. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. இரண்டாம் போட்டி: தரப்பட்ட தலைப்பில் சொந்த அனுபவத்தை இணைத்துப் பேசுதல் என்னுடைய வாழ்வில் நான் உயர எனக்குத் தேவையான குறள் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவரும் தனக்குப் பிடித்த திருக்குறளைப் பற்றிப் பேசுதல் ஒவ்வொருவருக்கும் தம்முடைய சொந்தக்குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியன தெரியும். இந்த நிலையில் ஒருவர் முன்னேற அவரது நிலையிலிருந்து அவர் பின்பற்ற வேண்டிய ஒரு குறள் இருக்கும். அது அவரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அதுபோல், தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு திருக்குறளைப் பற்றித் தம் குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் விளக்கிச்சொல்லி சொல்ல வேண்டும். இந்தப் பேச்சு, தரமான பேச்சுத்தமிழில் இடம்பெற வேண்டும். இப்போட்டிக்கான அதிகபட்சம் 4 நிமிடங்கள் வரை தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. உயர்நிலை 1, 2 வகுப்புகளில் (Secondary 1 & 2) பயிலும் மாணவர்கள் பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பிக்கும் போட்டியும் குறும்படத்தைப் போட்டுக்காட்டிப் பேசும் போட்டியும்
உயர்நிலை 1, 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான போட்டிகள் இந்தப் போட்டிகளில் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை ஒன்று, இரண்டு ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் போட்டி ஒன்று: திருவள்ளுவரின் கல்வி, மடியின்மை ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள 20 திருக்குறள்களையும் மனனம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பிக்கும் போட்டி திருக்குறள்களையும் அவற்றின் பொருளையும் நன்கு மனனம் செய்தல், கேட்பவர் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்சரிப்புடன் குரல் ஏற்ற இறக்கத்தோடு பொருத்தமான தொனியில் ஒப்பிப்பது ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும் இதற்கான அதிகபட்ச நேரம் 6 நிமிடங்கள் கல்வி 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். 2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். 3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே. கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர் ஆவா. 4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் மகிழும்படியாகக் கூடிப்பழகி, (‘இனி இவரை எப்போது காண்போம்’ என்று) வருந்தி நினைக்கும்படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். 5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர். 6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அதுபோல் மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். 7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? 8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும். 9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். 10. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. மடியின்மை 1. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும். 2. மடியை மடியா ஒழுகல் குடியைக் தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும். 3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும். 4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும். 5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். 6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது. 7. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர். 8. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும். 9. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும். 10. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். இரண்டாம் போட்டி: தரப்பட்ட தலைப்பில் சொந்த அனுபவத்தை இணைத்து ஒரு குறும்படம் தயாரித்துப் போட்டுக்காட்டுதல் என்னுடைய வாழ்வில் நான் உயர எனக்குத் தேவையான குறள் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவரும் தனக்குத் தேவையான திருக்குறளைப் பற்றி மூனறு முதல் நான்கு நிமிடங்களில் ஒரு குறும்படத்தைத் தயாரித்து, அதைப் போட்டுக்காட்டுதல். ஒவ்வொருவருக்கும் தம்முடைய சொந்தக்குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியன தெரியும். இந்த நிலையில் ஒருவர் முன்னேற அவரது நிலையிலிருந்து அவர் பின்பற்ற வேண்டிய ஒரு குறள் இருக்கும். அது அவரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அதுபோல், தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு திருக்குறளைப் பற்றித் தம் குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் குறும்படத்தைத் தயாரித்துப் போட்டுக்காட்டி, அதைப்பற்றி விளக்கிச்சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் பேசும் பகுதிகள், தரமான பேச்சுத்தமிழில் இடம்பெற வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம்முடைய சொந்தக்குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியன தெரியும். இந்த நிலையில் ஒருவர் முன்னேற அவரது நிலையிலிருந்து அவர் பின்பற்ற வேண்டிய ஒரு குறள் இருக்கும். அது அவரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அதுபோல், தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு திருக்குறளைப் பற்றித் தம் குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் குறும்படத்தைத் தயாரித்து விளக்கிச்சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் தரமான பேச்சுத்தமிழில் இடம்பெற வேண்டும். போட்டிக்கான அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. உயர்நிலை 3,4,5 வகுப்புகளில் (Secondary 3,4 & 5) பயிலும் மாணவர்கள் இருபது குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டியும் இணையாளருடன் பேசிக் காணொளியில் பதிவு செய்து போட்டுக்காட்டும் போட்டியும்
உயர்நிலை 3,4,5 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான போட்டிகள் இந்தப் போட்டிகளில் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் போட்டி ஒன்று: திருவள்ளுவரின் அறத்துப்பாலில் அல்லது பொருட்பாலில் இடம்பெறும் ஏதேனும் இரண்டு அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். போட்டிக்கான குறைந்தபட்ச நேரம் மூன்று (3) நிமிடங்களாகவும் அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்களாகவும் இருக்கும். நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், இணையாளரையும் பார்வையாளர்களையும் பார்த்துப் பேசுதல் இரண்டாம் போட்டி: மாணவர்கள், தாம் தேர்ந்தெடுத்த அதிகாரக்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைப் பயன்படுத்தித் திருக்குறளும் தமிழ்ப் பண்பாடும் என்ற தலைப்பில் தம் இணையாளருடன் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் பேசிப் பதிவு செய்த ஒளிப்பதிவைப் போட்டுக்காட்டுதல். இதற்கான அதிகபட்ச நேரம் 4 நிமிடங்கள் போட்டிக்கான அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. தொடக்கக்கல்லூரிகளில் (Junior College Year 1 & Year 2) பயிலும் மாணவர்களுக்கும் மிலேனியா கல்வி நிலையத்தில் (Millennia Institute Year 1, Year 2 & Year 3) பயிலும் மாணவர்களுக்கும் இருபது குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போட்டியும் இணையாளருடன் பேசிக் காணொளியில் பதிவு செய்து போட்டுக்காட்டும் போட்டியும்
தொடக்கக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் மிலேனியாக் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்குமான போட்டிகள் இந்தப் போட்டிகளில் தொடக்கக்கல்லூரிகளில் ஆண்டு ஒன்று, இரண்டு வகுப்புகளில் உயர்நிலை மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் போட்டி ஒன்று: திருவள்ளுவரின் அறத்துப்பாலில் அல்லது பொருட்பாலில் இடம்பெறும் ஏதேனும் இரண்டு அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். போட்டிக்கான குறைந்தபட்ச நேரம் மூன்று (3) நிமிடங்களாகவும் அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்களாகவும் இருக்கும். நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், இணையாளரையும் பார்வையாளர்களையும் பார்த்துப் பேசுதல் இரண்டாம் போட்டி: மாணவர்கள், தாம் தேர்ந்தெடுத்த அதிகாரக்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைப் பயன்படுத்தித் திருக்குறளும் தமிழ்ப் பண்பாடும் என்ற தலைப்பில் தம் இணையாளருடன் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் பேசிப் பதிவு செய்த ஒளிப்பதிவைப் போட்டுக்காட்டுதல். இதற்கான அதிகபட்ச நேரம் 4 நிமிடங்கள் போட்டிக்கான அதிகபட்சம் 9 நிமிடங்கள் வரை தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களுக்கான போட்டிகள்பொதுமக்கள் தரப்பட்ட தலைப்பில் பேசிப் பதிவு செய்த உரையைப் போட்டுக்காட்டிப் பேசும் போட்டியும் நடுவர் தெரிவு செய்யும் தலைப்பில் பேசும் போட்டியும்
பொதுமக்களுக்கான இப்போட்டிகளில் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெற்றோர், இங்கு வேலை செய்வதற்கான முறையான அனுமதியை ( Employment Pass/ Work Permit) எழுத்துமூலமாகப் பெற்றுள்ளோரும் பங்கேற்கலாம். இங்கு மொத்தம் இரண்டு போட்டிகள் இடம்பெறுகின்றன. போட்டி ஒன்று: திருவள்ளுவரும் நானும் தலைப்புக் குறித்துப் பேசிய பகுதியைக் காணொளியாகக் காட்டும் போட்டி திருவள்ளுவர் என்றதும் உங்களுக்குத் தோன்றுவது என்ன? அல்லது யாவை? திருவள்ளுவருக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பு யாது? அதாவது அவர் ஒரு வழிகாட்டியாக இருக்கிறாரா? நண்பராக இருக்கிறாரா? புரட்சியாளராகத் தெரிகிறாரா? பெண்மையைப் போற்றுபவராகத் தெரிகிறாரா? திருவள்ளுவர் இங்களுக்கு எப்படித்தெரிகிறார்? தங்கள் குடும்பத்தினருக்குத் திருவள்ளுவர் தேவையானவராக இருக்கிறாரா? தங்கள் வாழ்வில் பாரதியின் பங்கு என்ன? என்பன குறித்துப் பேசும் போட்டி
போட்டி இரண்டு: தரப்பட்டுள்ள தலைப்புகளில் குறிப்பிட்ட தலைப்பில் பேசுதல்
இதற்கான அதிகபட்ச நேரம் 4 நிமிடங்கள் போட்டிக்கான அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை தரப்படும். போட்டிக்கான விதிமுறைகள் :
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி அவர்களைத் தொலைபேசி எண் +65 90043427 இலும் திரு கார்த்திக் சிதம்பரம் அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது. |