நிகழ்ச்சிகள்

Event Details

திருக்குறள் விழா 2023 போட்டிகள்
பாலர், தொடக்க நிலை, உயர்நிலை பள்ளி மாணவர்கள் போட்டிகள்

நுழைவு : அனுமதி இலவசம்...!
நாள் : 19-03-2023
நேரம் : 9 AM to 3 PM
இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
பாலர் பள்ளிகளில் பாலர் வகுப்புகள் ஒன்று, இரண்டு (Kindergarten 1,2) ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான மனனப்போட்டிகள் பாலர் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஒன்று, இரண்டு ஆகியவற்றில் பயிலும் (Nursery 1,2) மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள் தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்களுக்கு பத்துக் குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டிதொடக்கநிலை 3, 4 வகுப்புகளில் (Primary 3 & 4) பயிலும் மாணவர்களுக்கான திருகுறள்களை மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள்தொடக்கநிலை 5, 6 வகுப்புகளில் (Primary 5 & 6) பயிலும் மாணவர்களுக்கு பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் ஒரு தலைப்பில் பேசும் போட்டியும் உயர்நிலை 1, 2 வகுப்புகளில் (Secondary 1 & 2) பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி உயர்நிலை 3,4 மற்றும் 5 (Secondary 3,4 & 5) பயிலும் மாணவர்கள் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைக்குறித்துப் பேச வேண்டும்

பாலர் பள்ளிகளில் பாலர் வகுப்புகள் ஒன்று, இரண்டு (Kindergarten 1,2) ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான மனனப்போட்டிகள்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வியாழக்கிழமை 16 மார்ச் 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/211684232633452
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

திருக்குறள் பொருட்பாலில் அன்புடைமை என்ற அதிகாரத்தில் முதல் ஐந்து திருகுறள்களை (1, 2, 3, 4, 5) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான அதிகபட்ச நேரம் 3 நிமிடங்கள்.

அன்புடைமை

1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பிலிருந்து இரு மாணவர்களும் பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பிலிருந்து இரு மாணவர்களும் போட்டியில் பங்கேற்கலாம்.
  • போட்டிக்கு வரும் படைப்புகளில் தமிழ்மொழியின் பண்பாடு, நல்ல சரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • இங்கு போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளி சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க்கவேண்டும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி(Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

பாலர் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஒன்று, இரண்டு ஆகியவற்றில் பயிலும் (Nursery 1,2) மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வியாழக்கிழமை 16 மார்ச் 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/220283620161444
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

திருக்குறள் விழா 2023 போட்டியுடன் தொடர்புடைய படம் ஒன்று மாணவர்களுக்கு தரப்படும். மாணவர்கள் அப்படத்துடன் வண்ணம் தீட்ட வேண்டும். வண்ணம் தீட்டுவதற்கான பொருள்களை தயவு செய்து வீட்டிலிருந்து எடுத்து வருமாறு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கேட்டுக்கொன்கிறோம்.

நீங்கள் தரப்பட்ட படத்துக்கு வண்ணம் தீட்டுவதற்கான அதிகபட்ச நேரம் (60 நிமிடங்கள்).

போட்டிக்கான விதிமுறைகள்:

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பிலிருந்து இரு மாணவர்களும் பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பிலிருந்து இரு மாணவர்களும் போட்டியில் பங்கேற்கலாம்.
  • இங்கு போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளி சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க்கவேண்டும்.
  • போட்டிக்கு வரும் படைப்புகளில் பொருத்தமாக பயன்படுத்தும் நிறம், மூலப்படம் தெளிவாக தெரியும் வகையில் அதை வண்ணத்தால் அழகுபடுத்துதல், கலை உணர்வை வெளிப்படுத்துதல், பார்வைக்கு எடுப்பாக தெரியவைத்தல் போன்ற கூறுகள் மதிப்பிடலின்போது கவனத்தில் கொள்ளப்படும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி(Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்களுக்கு பத்துக் குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வியாழக்கிழமை 16 மார்ச் 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/220284009566455
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

தொடக்கநிலை 1, 2 வகுப்புகளில் (Primary 1 & 2) பயிலும் மாணவர்கள் திருக்குறள், அறத்துப்பாலில் கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள 10 குறள்களை மனனம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான அதிகபட்சம் நேரம் 6 நிமிடங்கள்.

கல்வி ( மு வரதராசனார் உரை)

1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வவண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

10. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியை தவிர மற்றப் சபாருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பிலிருந்து இரு மாணவர்களும் பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பிலிருந்து இரு மாணவர்களும் போட்டியில் பங்கேற்கலாம்.
  • திருக்குறள்களையும் அவற்றின் பொருள்களையும் ஒப்பிப்பதற்கு அதிகபட்சமாக 6 நிமிடம் கொடுக்கப்படும்.
  • திருக்குறள்களையும் அவற்றின் பொருளையும் நன்கு மனனம் செய்தல், கேட்பவர் புரிந்துசகாள்ளும் வளகயில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்செரிப்புடன் குரல் ஏற்ற இறக்கத்வதாடு சபாருத்தமான சதானியில் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளி சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க்கவேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி (Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

தொடக்கநிலை 3, 4 வகுப்புகளில் (Primary 3 & 4) பயிலும் மாணவர்களுக்கான திருகுறள்களை மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வியாழக்கிழமை 16 மார்ச் 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/220283759224457
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

திருக்குறளில் பொருட்பாலில் நாடு அதிகாரத்தில் உள்ள பத்துத் திருக்குறள்களையும் பொருளுடன் படித்து மனனம் பெய்து ஒப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான அதிகபட்ச நேரம் 7 நிமிடங்கள்.

நாடு

1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

குறையாத விளைபொருளும் தக்க அறிகரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
வெரொ தியல்ேது நொடு.

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இந்த போட்டிப் பிரிவுக்கு மொத்தம் 2 மாணவர்கள் பங்கேற்கலாம்.
  • இங்கு போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளி சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க்கவேண்டும்.
  • போட்டிக்கு வரும் படைப்புகளில் தமிழ்மொழியின் பண்பாடு, நல்ல சரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • பொருளை ஒப்பிக்கும்போது எழுத்துத் தமிழுக்கு பதிலாக பேச்சுத் தமிழையும் பயன்படுத்தலாம்.
  • பேச்சுத்தமிழுடன் தொடர்புடையுடய போட்டிகளில் பேச்சுத்தமிழைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தும் பாங்கு கவனிக்கப்படும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி (Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

தொடக்கநிலை 5, 6 வகுப்புகளில் (Primary 5 & 6) பயிலும் மாணவர்களுக்கு பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பித்தல் போட்டியும் ஒரு தலைப்பில் பேசும் போட்டியும்
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வியாழக்கிழமை 16 மார்ச் 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/220283445183453
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்

முதல் போட்டி : வாய்மை அதிகாரத்தில் உள்ள 10 குறள்களை மனப்பாடம் செய்து அவற்றின் பொருளுடன் சேர்த்து ஒப்பித்தல். திருகுறள்களையும் அவற்றின் பொருளையும் நன்கு மனனம் செய்து, கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக ஒப்பித்தல், உரிய உச்சரிப்புடன், குரல் ஏற்ற இறக்கத்தோடு பொருத்தமான தொனியில் ஒப்பிப்பது ஆகியன மதிப்பீட்டில் கவனத்தில் கொள்ளப்படும்.

இப்போட்டிக்கான அதிகபட்ச நேரம் 4 நிமிடங்கள்

வாய்மை

1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

2. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

6. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

8. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

10. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

இரண்டாம் போட்டி: தரப்பட்ட தலைப்பில் சொந்த அனுபவத்தை இணைத்துப் பேசுதல்

என்னுடைய வாழ்வில் நான் நல்லவனாகவும் வல்லவனாகவும் முன்னேற எனக்குத் தேவையான குறல் என்ற தலைப்பில் ஓவ்வொரு மாணவரும் தனக்கு பிடித்த திருக்குறளை பற்றிப் பேசுதல்.

ஒவ்வொருவருக்கும் தம்முடைய சொந்தக்குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியன பற்றித் தெரியும். இந்த நிலையில் ஒருவர் முன்னேற அவரது நிலையிலிருந்து அவர் பின்பற்ற வேண்டிய ஒரு குறள் இருக்கும். அது அவரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அதுபோல், தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு திருக்குறளைப் பற்றித் தம் குணம், விருப்பம், பலம், பலவீனம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் விளக்கிச்சொல்லி சொல்ல வேண்டும். இந்தப் பேச்சு, தரமான பேச்சுத்தமிழில் இடம்பெற வேண்டும்.

இப்போட்டிக்கான அதிகபட்சம் 4 நிமிடங்கள் வரை தரப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இந்த போட்டிப் பிரிவுக்கு மொத்தம் 2 மாணவர்கள் பங்கேற்கலாம்.
  • திருக்குறள்களையும் அவற்றின் பொருள்களையும் ஒப்பிப்பதற்கும், ஒரு தலைப்பில் பேசும் போட்டியில் பங்கேற்பதற்கும் சேர்த்து அதிகபட்சம் 8 நிமிடம் கொடுக்கப்படும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்கு போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளி சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க்கவேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி (Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

உயர்நிலை 1, 2 வகுப்புகளில் (Secondary 1 & 2) பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வியாழக்கிழமை 16 மார்ச் 2023 அன்று இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/220283444968463
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

உயர்நிலை 1, 2 வகுப்புகளில் (Secondary 1 & 2) பயிலும் மாணவர்கள் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைக் குறித்து பேச வேண்டும்.

திருவள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் சொன்ன கருத்துகள் என்னைப் போன்ற மாணவர்களுக்கு எவ்வகையில் பொருந்தும் என்பதை பற்றி எடுத்துரைக்கவும்.

மாணவர்களுக்கான அதிகபட்ச நேரம் 7 நிமிடங்கள்.

அல்லது

திருவள்ளுவர் மனித வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில் திருக்குறளை எழுதியுள்ளார் என்ற தலைப்பில் பேசுதல்.

மாணவர்களுக்கான அதிகபட்ச நேரம் 7 நிமிடங்கள்.

மாணவர்கள் தரமான பேச்சுத் தமிழில் பேசுதல் எதிர்பார்க்கப்படுகிறது.

கேட்பவருக்குப் புரியும் வண்ணம் பேசுவதும் கருத்துக்களை அவர்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் பேசுவது எதிர்பார்க்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இந்த போட்டிப் பிரிவுக்கு மொத்தம் 2 மாணவர்கள் பங்கேற்கலாம்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • இங்கு போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளி சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க்கவேண்டும்.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி (Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

உயர்நிலை 3,4 மற்றும் 5 (Secondary 3,4 & 5) பயிலும் மாணவர்கள் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைக்குறித்துப் பேச வேண்டும்

உயர்நிலை மூன்று, நான்கு, ஐந்து, வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்.

உயர்நிலை 3, 4 மற்றும் 5 (Secondary 3, 4 & 5) பயிலும் மாணவர்கள் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைக்குறித்து பேச வேண்டும்.

தலைப்பு:

இன்றைய மாணவர்கள் பிற்காலத்தில் தங்கள் வீடுகளில் தமிழில் தொடர்ந்து பேச நாம் இப்போதிருந்து என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று உங்கள் ஆலோசனைகளைக் கூறுக.

அல்லது

இன்றைய இளையர்கள் தங்கள் வாழ்வில் திருவள்ளுவரின் கருத்துக்களை தொடர்ந்து பின்பற்ற என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று உங்கள் ஆலோசனைகளை தருக.

மேலே தரப்பட்ட இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து பேச்சுத்தமிழில் பேசுங்கள். போட்டிக்கான அதிகபட்ச நேரம் 8 நிமிடங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள் :

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இந்த போட்டிப் பிரிவுக்கு மொத்தம் 2 மாணவர்கள் பங்கேற்கலாம்.
  • போட்டிக்கு பங்கேற்கும் மாணவர்கள் பேசும்போது, தமிழ்மொழியின் பயன்பாடு, நல்ல சரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • கேட்பவருக்கு புரியும்வண்ணம் பேசுவதும் கருத்துக்களை அவர்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் பேசுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • பேசும்போதும் தேவையான இடங்களில் எழுத்து தமிழுக்குப் பதிலாகப் பேச்சு தமிளைப் பயன்படுத்தலாம்.
  • பேச்சு தமிழுடன் தொடருபுடைய போட்டிகளில் பேச்சுத் தமிழை தனமிபிக்கையுடன் பயன்படுத்தும் பாங்கு கவனிக்கப்படும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டி (Mr Kethrabalan Mookandi) அவர்களைத் தொலைபேசி எண் +65 9004 3427 இலும் tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரம் (Mr Karthick Chidambaram) அவர்களைத் தொலைபேசி எண் +65 92410109 இலும்,tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி வணக்கம்.

திரு மு ஹரிகிருஷ்ணன்
தலைவர், தமிழ்மொழி பண்பொட்டுக் கழகம்
சிங்கப்பூர்

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor