பாலர் பள்ளியில் வகுப்பு 1 - ல் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240203205646445 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 1 இல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட திருக்குறள் பாடல்வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
திருவள்ளுவரின் திருக்குறள்
(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (குறள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்).
பாலர் வகுப்பு ஒன்று (1 முதல் 10 பாடல்கள்) அன்புடைமை அதிகாரத்தில் (குறள்கள் 71 முதல் 80 வரை) உள்ள பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து, பொருள் விளங்கும்படி அவற்றை வரிசையாக ஒப்பித்தல்
அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடைமையையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் (௭௰௪).
5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர் (௭௰௫).
6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
8. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-008.html
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் ஐந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- பாடல்களை ஒப்பிப்பதற்கு அதிகபட்ச நேரம் மூன்று (3) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 2 - ல் பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240293886155464 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி: தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 2 இல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட திருக்குறள் பாடல் வரிகளை (குறள் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
திருவள்ளுவரின் திருக்குறள்
(குறிப்பு: திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின்(குறளின்) பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.).
பாலர் வகுப்பு இரண்டு (1 முதல் 10 பாடல்கள்) பாலர் வகுப்பு 2இல் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள். அன்புடைமை அதிகாரத்தில் (குறள்கள் 71 முதல் 80 வரை) உள்ள பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து, பொருள் விளங்கும்படி அவற்றை வரிசையாக ஒப்பித்தல்
அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடைமையையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் (௭௰௪).
5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர் (௭௰௫).
6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
8. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-008.html
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் ஐந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- பாடல்களை (குறள்களை) ஒப்பிப்பதற்கு அதிகபட்ச நேரம் மூன்று(3) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
பாலர்பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240223328258452 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி: வண்ணம் தீட்டும் போட்டி
இப்போட்டியில் பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் தங்களுக்குத் தரப்படும் திருக்குறளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் வண்ணம் தீட்டுதல் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்குத் தேவையான வண்ணப் பென்சில்கள், அழிப்பான்கள் (Eraser) போன்ற பொருள்களை அவர்கள் தாமே கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வண்ணம் தீட்டுதலுக்கான திருக்குறள் இதோ:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற
பொருத்தமான முறையில் தரப்பட்டுள்ள திருக்குறளை அழகுபடுத்த ஏற்ற வண்ணங்களைப் பயன்படுத்துதல், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் திருக்குறளுக்கு மட்டும் வண்ணம் தீட்டியிருத்தல் போன்றவை மதிப்பீட்டின் போது கவனத்தில் கொள்ளப்படும். வண்ணம் தீட்டப்பட்ட திருக்குறளைக் கொண்ட தாள்களைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தனது பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது இங்கு குறிப்பிடப்படுகிறது.
வண்ணம் தீட்டுதலுக்கான நேரம் ஒரு மணிநேரம்
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் ஐந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- வண்ணம் தீட்டுதலுக்கான அதிகபட்ச நேரம் அறுபது (60) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 1 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240213965555458 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி : தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை ஒன்று பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட திருக்குறள் பாடல் வரிகளை (குறள் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
திருக்குறளின் திருக்குறள்
(குறிப்பு: திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
தொடக்கநிலை வகுப்பு ஒன்று (1 முதல் 20 பாடல்கள்)
தொடக்கநிலை 1 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கமுடைமை (குறள்கள் 131-140), பொறையுடைமை (குறள்கள் 151-160) ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களைப் பொருள் விளங்கும்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
ஒழுக்கமுடைமை
1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-014.html
பொறையுடைமை
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
3. இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-016.html
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240293952364460 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி : தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை இரண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட திருக்குறள் பாடல் வரிகளை (குறள் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
திருக்குறளின் திருக்குறள்
(குறிப்பு: திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
தொடக்கநிலை வகுப்பு இரண்டு (1 முதல் 20 பாடல்கள்)
தொடக்கநிலை 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கமுடைமை (குறள்கள் 131-140), பொறையுடைமை (குறள்கள் 151-160) ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களைப் பொருள் விளங்கும்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
ஒழுக்கமுடைமை
1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-014.html
பொறையுடைமை
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
3. இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-016.html
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 3 பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களைத் தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240222156372447 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி : திருக்குறள் பாடல்களைத் தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
தொடக்கநிலை மூன்று வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குப் போட்டிகள் இரண்டு சுற்றுகளில் நடைபெறும்.
முதல் சுற்று
பின்வரும் அதிகாரங்களைக் கொண்ட 20 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல்
கல்வி (குறள்கள் 391- 400) வாய்மை (குறள்கள் 291-300)
இரண்டாம் சுற்று
காஹூட் சுற்று
கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள குறள்கள் (391-400) குறித்துத் தரப்படும் வினாக்களுக்குக் காஹூட் வழியே பதில்களைத் தருதல்.
முதல் சுற்று
போட்டி : திருக்குறள் பாடல்களைத் தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை மூன்று வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
கல்வி
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-040.html
வாய்மை
1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
2. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
6. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
8. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
10. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
குறிப்பு : https://www.thirukkural.net/ta/kural/adhigaram-030.html
இரண்டாம் சுற்று
காஹூட் சுற்று
சுற்று இரண்டு
- கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள குறள்கள் (391 - 400) குறித்துத் தரப்படும் வினாக்களுக்குக் காஹூட் வழியே பதில்களைத் தருதல்.
- இந்தப் போட்டியில் பங்கேற்க அதிகபட்சம் பத்து நிமிடங்கள் தரப்படும்.
- Kahoot என்னும் செயலியை கொண்டு நடத்தப்படும் இந்த இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு மாணவர்கள் இணைய இணைப்புடன் கூடிய திறன்பேசியை (Internet connected Smartphone) எடுத்து வர வேண்டும்.
- இந்தச் சுற்றில் காஹூட் (Kahoot) முறையில் மேலே தரப்பட்ட செய்யுள்கள் தொடர்பான வினாக்கள் தரப்பட்டுச் சரியான விடையைத் தருபவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
- Kahoot இணைய முகவரி, போட்டிக்கு முன் கொடுக்கப்படும்.
- போட்டியில் இணைய, ஒரு குறியீட்டு எண் (PIN CODE) திரையில் காண்பிக்கப்படும்.
- குறியீட்டின் மூலம் காஹூட்டில் இணைந்த பின், போட்டியாளர்கள் தங்கள் பெயரையும் பதிவு எண்ணையும் (Name and Registration number) கொண்டு போட்டியில் இணையலாம் (KKC1-01)
- ஒவ்வொரு கேள்விகளுக்கும் 20 வினாடிகள் கொடுக்கப்படும்.
- 20 வினாடிகள் முடிந்த கேள்விகளுக்கு மீண்டும் திரும்பி செல்ல இயலாது.
- சரியான பதில், தேர்வு செய்ய எடுத்துக்கொண்ட நேரம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- இரண்டுக்கு மேற்பட்ட மாணவர்கள்களின் மதிப்பெண்களும் நேரமும் ஒன்றாக இருந்தால் மீண்டும் மேலே தரப்பட்ட செய்யுள்கள் தொடர்பான வினாக்கள் தரப்பட்டு, போட்டி நடத்தப்படும்.
- போட்டி நடைபெறும் போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கலால் போட்டியிலிருந்து வெளியேறினால் , 1 நிமிடத்திற்குள் மீண்டும் போட்டிக்குள் நுழைய வேண்டும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
இந்தப் போட்டிக்கான நேரம் 10 நிமிடங்கள்
போட்டி ஒன்றுக்கும் இரண்டுக்கும் சேர்த்து ஒரு மாணவருக்கு 15 நிமிடங்கள் தரப்படும்
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- இரண்டு சுற்றுகளுக்கும் சேர்த்து அதிகபட்ச நேரம் பதினைந்து (15) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 4 பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களைத் தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240272612161445 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி : திருக்குறள் பாடல்களைத் தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
தொடக்கநிலை நான்கு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குப் போட்டிகள் இரண்டு சுற்றுகளில் நடைபெறும்.
முதல் சுற்று
பின்வரும் அதிகாரங்களைக் கொண்ட 20 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல்
கல்வி (குறள்கள் 391- 400) வாய்மை (குறள்கள் 291-300)
இரண்டாம் சுற்று
காஹூட் சுற்று
கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள குறள்கள் (391-400) குறித்துத் தரப்படும் வினாக்களுக்குக் காஹூட் வழியே பதில்களைத் தருதல்.
முதல் சுற்று
போட்டி : திருக்குறள் பாடல்களைத் தமிழில் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை நான்கு வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

தொடக்கப்பள்ளி வகுப்பு 5, 6 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட தமிழில் திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240222454209447 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
போட்டி : இரண்டு சுற்று கொண்ட தமிழில் திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
தொடக்கிநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு சுற்றுகளில் போட்டி நடைபெறும்.
முதல் சுற்று
தமிழில் திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
மாணவர்கள் புகழ் (குறள்கள் 231 - 240) என்னும் அதிகாரத்தில் உள்ள குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள்.
இப்போட்டியில், தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்ட பத்துக் குறள்களை (பாடல் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 4 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
பாடல்களை ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
புகழ்
1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
2. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.
5. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
6. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
7. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?
8. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
9. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
10. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
https://www.thirukkural.net/ta/kural/adhigaram-024.html
குறிப்பு : (முதல் சுற்றில் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
இரண்டாம் சுற்று
பொருளைக் கேட்டுக் குறளைச் சொல்வேன்
நீதிபதி புகழ் என்ற அதிகாரத்தில் உள்ள முதல் ஐந்து குறள்களில் ஏதேனும் குறளின் பொருளைச் சொல்வார். அதைக் கேட்டதும் மாணவர்கள் அப்பொருளுக்கான குறளைக் கூற வேண்டும். இது பின்வரும் குறள்களில் இடம்பெறும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
புகழ்
1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
2. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.
5. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- முதல் சுற்று அதிகபட்சமாக 4 நிமிடங்கள், இரண்டாம் சுற்று அதிகபட்சமாக 5 நிமிடங்கள், இரண்டு சுற்றுகளுக்கும் சேர்த்து அதிகபட்ச நேரம் ஒன்பது (9) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
உயர்நிலைப்பள்ளி 1, 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட பேச்சுப் போட்டி மற்றும் தமிழில் திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், 2, பீட்டி ரோடு, சிங்கப்பூர் 209943 |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240222646861454 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
முதல் சுற்று
திருக்குறளும் அறிவியலும் (இணையாக இருவர், பவர் பாயிண்ட் படவில்லைகளைப் பயன்படுத்திப் படைத்தல்)
மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த அல்லது தாங்கள் விரும்பும் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பையும் அதனுடன் தொடர்புடைய திருக்குறளையும் இணைத்து ஏழு நிமிடங்களுக்குப் பேச வேண்டும். இதற்கு அதிகபட்சமாக ஏழு (7) நிமிடங்கள் தரப்படும். அவர்கள் மூன்று முதல் ஆறு படவில்லைகள் வரை பயன்படுத்தலாம். இதை அவர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மற்றொரு நண்பருடன் இணைந்து படைக்கலாம்.
இரண்டாம் சுற்று
இரண்டாம் சுற்று திருக்குறள் பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல். இந்தப் போட்டிக்கான நேரம் நான்கு நிமிடங்கள்.
இன்னா செய்யாமை (குறள் 311 - 320)என்ற அதிகாரத்தில் உள்ள குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல்
இன்னா செய்யாமை
1. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். பொருள் - சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
2. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். பொருள் - ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். பொருள் - தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். பொருள் - இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
5. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. பொருள் - மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
6. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். பொருள் - ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. பொருள் - எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
8. தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். பொருள் - தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
9. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். பொருள் - முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
10. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். பொருள் - துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
https://www.thirukkural.net/ta/kural/adhigaram-032.html
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் (போட்டி ஒன்றில் இரண்டு இணைகள் என அவர்கள் அமைவார்கள்) போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- முதல் சுற்றுக்கு அதிகபட்சமாக 7 நிமிடங்கள் , இரண்டாம் சுற்றுக்கு அதிகபட்சமாக 4 நிமிடங்கள் தரப்படும்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
உயர்நிலைப்பள்ளி 3, 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட தமிழில் திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், 2, பீட்டி ரோடு, சிங்கப்பூர் 209943 |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240223351804445 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
முதல் சுற்று
குறளும் பொருளும் என்ற தலைப்பில் பொருள்களுக்கு ஏற்ற குறள்களை மாணவர்கள் ஒப்பித்தல்
உயர்நிலை மூன்று, நான்கு, ஐந்து வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நாடு (குறள்கள் 731-740) என்ற தலைப்பில் அமைந்த அதிகாரத்தில் உள்ள குறள்களையும், தரப்பட்ட பொருள்களையும் மனப்பாடம் செய்தல் வேண்டும். அந்தப் பொருள்களுக்கான குறள்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
போட்டி நாளன்று குறள்களுக்கான பொருள்கள் மட்டும் ஒரு தாளில் தரப்படும் அல்லது திரையில் காட்டப்படும். அதைப் பார்த்து மாணவர்கள் பொருள்களுக்கு ஏற்ற குறள்களைக் கூற வேண்டும்.
இந்தப் போட்டிக்கு மொத்தம் அதிகபட்சமாக 8 நிமிடங்கள் தரப்படும்.
நாடு
1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. பொருள் - குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. பொருள் - மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. பொருள் - (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. பொருள் - மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. பொருள் - பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. பொருள் - பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. பொருள் - ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. பொருள் - நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. பொருள் - முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. பொருள் - நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
https://www.thirukkural.net/ta/kural/adhigaram-074.html
இரண்டாம் சுற்று
குறிப்பிட்ட அதிகாரம் (நாடு) தொடர்பாக இங்கு இரண்டு தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பற்றி விவாதிப்பதுபோல் ஐந்து நிமிடங்களுக்குத் தரமான பேச்சுத்தமிழில் பேச வேண்டும்.
- வள்ளுவர் காண விரும்பிய நாடும் சிங்கப்பூரும்
- வள்ளுவர் காண விரும்பிய நாட்டில் வாழும் உங்களுடைய சிந்தனைகள்
விவாதத்தின்போது, தங்கள் கருத்துகளை உரிய காரணங்களுடன் பேச வேண்டும்.
இந்தப் போட்டிக்கான நேரம் அதிகபட்சமாக 5 நிமிடங்கள்
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப்படிவங்களை ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- போட்டி ஒன்றுக்கு அதிகபட்சமாக 8 நிமிடங்கள் , இரண்டுக்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் தரப்படும்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கக்கல்லூரிகளிலும் மிலேனியா கல்வி நிலையத்திலும் புகுமுக வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட தமிழில் திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : ஞாயிற்றுக் கிழமை, 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/240302677409455 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை |
முதல் சுற்று
குறளும் பொருளும் என்ற தலைப்பில் பொருள்களுக்கு ஏற்ற குறள்களை மாணவர்கள் ஒப்பித்தல்
பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நாடு (குறள்கள் 731-740) என்ற தலைப்பில் அமைந்த அதிகாரத்தில் உள்ள குறள்களைத் தரப்பட்ட பொருள்களுக்கு ஏற்ப மனப்பாடம் செய்து ஒப்பித்தல். அந்தப் பொருள்களுக்கான குறள்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
போட்டி நாளன்று பொருள்கள் மட்டும் ஒரு தாளில் தரப்படும் அல்லது திரையில் காட்டப்படும். அதைப் பார்த்து மாணவர்கள் பொருள்களுக்கு ஏற்ற குறள்களைக் கூற வேண்டும்.
இந்தப் போட்டிக்கு மொத்தம் எட்டு (8) நிமிடங்கள் தரப்படும்.
நாடு
1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. பொருள் - குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. பொருள் - மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. பொருள் - (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. பொருள் - மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. பொருள் - பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. பொருள் - பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. பொருள் - ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. பொருள் - நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. பொருள் - முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. பொருள் - நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
https://www.thirukkural.net/ta/kural/adhigaram-074.html
போட்டி இரண்டு
குறிப்பிட்ட அதிகாரம் (நாடு) தொடர்பாக இங்கு இரண்டு தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பற்றி விவாதிப்பதுபோல் ஐந்து நிமிடங்களுக்குத் தரமான பேச்சுத்தமிழில் பேச வேண்டும்.
- வள்ளுவர் காண விரும்பிய நாடும் சிங்கப்பூரும்
- வள்ளுவர் காண விரும்பிய நாட்டில் வாழும் உங்களுடைய சிந்தனைகள்
விவாதத்தின்போது, தங்கள் கருத்துகளை உரிய காரணங்களுடன் பேச வேண்டும்.
இந்தப் போட்டிக்கான நேரம் 5 நிமிடங்கள்

|