புகுமுக வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான திருக்குறள் எழுதி வாசிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177819075463 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி: திருக்குறள் போல் எழுதி வாசிக்கும் போட்டி
போட்டி: குறள்கள், அவற்றின் பொருள் நோக்கிய என் குறள்கள்(குரல்கள்) என்ற தலைப்பில் “சான்றாண்மை” என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களில் எவையேனும் ஐந்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் திருக்குறள் போல் எழுதி வாசிக்கும் போட்டி.
மாணவர்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து தங்கள் குறள்களை எழுதி வாசிக்க வேண்டும். இந்தப் போட்டிக்கு மொத்தம் நாற்பது நிமிட நேரம் தரப்படும். (குறள்களை எழுதுவதற்கு அரை மணி நேரம் தரப்படும். குறள்களை வாசிப்பதற்குப் பத்து நிமிட நேரம் தரப்படும்)
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு தொடக்கக்கல்லூரியிலிருந்து அல்லது மிலேனியா கல்வி நிலையத்திலிருந்து அதிகபட்சம் நான்கு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப்படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- போட்டிக்காக ஒரு மாணவருக்கு 40 நிமிடங்கள் தரப்படும். (குறள்களை எழுதுவதற்கு அரை மணி நேரம் தரப்படும். குறள்களை வாசிப்பதற்குப் பத்து நிமிட நேரம் தரப்படும்)
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 1 - ல் பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250157297752463 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி: திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 1இல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்டுள்ள திருக்குறள் பாடல்வரிகளை மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும் போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
(குறிப்பு: பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (குறள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின்போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்).
பாலர் வகுப்பு ஒன்று (1 முதல் 10 பாடல்கள்) கல்வி என்ற அதிகாரத்தில் (குறள்கள் 391 முதல் 400 வரை) உள்ள பத்துக்குறள்களை மனப்பாடம் செய்து, பொருள் விளங்கும்படி அவற்றை வரிசையாக ஒப்பித்தல்
கல்வி
1.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
2.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவார்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். மகிழும்படியாகக் கூடிப் பழகி (‘இனி இவரை எப்போது காண்போம்’ என்று ) வருந்தி நினைக்கும்படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். செல்வர்முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் மூன்று மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- பாடல்களை ஒப்பிப்பதற்கு அதிகபட்ச நேரம் மூன்று (3) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 2 - ல் பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250173508553455 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி: திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 2 இல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

பாலர்பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250147332173449 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : வண்ணம் தீட்டும் போட்டி
இப்போட்டியில் பாலர் பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் தங்களுக்குத் தரப்படும் திருக்குறளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் வண்ணம் தீட்டுதல் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்குத் தேவையான வண்ணப் பென்சில்கள், அழிப்பான்கள் (Erasers) போன்ற பொருட்களை அவர்கள் தாமே கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வண்ணம் தீட்டுதலுக்கான திருக்குறள் இதோ :
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
பொருத்தமான முறையில் தரப்பட்டுள்ள திருக்குறளை அழகுபடுத்த ஏற்ற வண்ணங்களைப் பயன்படுத்துதல், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் திருக்குறளுக்கு மட்டும் வண்ணம் தீட்டியிருத்தல் போன்றவை மதிப்பீட்டின் போது கவனத்தில் கொள்ளப்படும். வண்ணம் தீட்டப்பட்ட திருக்குறளைக் கொண்ட தாள்களைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தனது பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது இங்கு குறிப்பிடப்படுகிறது.
வண்ணம் தீட்டுதலுக்கான நேரம் ஒரு மணிநேரம்
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் ஐந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- வண்ணம் தீட்டுதலுக்கான அதிகபட்ச நேரம் அறுபது (60) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 1 பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250173486278464 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை ஒன்று பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்டுள்ள திருக்குறள் பாடல் வரிகளை(குறள் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
(குறிப்பு: திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
தொடக்கநிலை வகுப்பு ஒன்று (1 முதல் 20 பாடல்கள்) தொடக்கநிலை 1 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கல்வி (குறள்கள் 391-400) அறிவுடைமை(குறள்கள் 421-430) ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களைப் பொருள் விளங்கும்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
கல்வி
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவார்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். மகிழும்படியாகக் கூடிப் பழகி (‘இனி இவரை எப்போது காண்போம்’ என்று ) வருந்தி நினைக்கும்படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். செல்வர்முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
அறிவுடைமை
1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
2. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்ல விடுவதே அறிவாகும்.
3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
5. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
6. எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
7. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
8. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
9. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை
10. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250176471088460 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
இப்போட்டியில் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை இரண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்டுள்ள திருக்குறள் பாடல் வரிகளை(குறள் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
(குறிப்பு: திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
தொடக்கநிலை வகுப்பு இரண்டு (1 முதல் 20 பாடல்கள்) தொடக்கநிலை 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கல்வி (குறள்கள் 391-400) அறிவுடைமை(குறள்கள் 421-430) ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களைப் பொருள் விளங்கும்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.

தொடக்கப்பள்ளி வகுப்பு 3 பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177241771455 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
தொடக்கநிலை மூன்று வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பின்வரும் அதிகாரங்களைக் கொண்ட 20 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல்
1.செய்ந்நன்றி அறிதல் (குறள்கள் 101- 110) 2.அடக்கமுடைமை (குறள்கள் 121-130)
மாணவர்கள் பின்வரும் பகுதியில் தரப்பட்டுள்ள திருக்குறள் பாடல் வரிகளை(குறள் வரிகளை) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
(குறிப்பு: திருக்குறள் பாடல் வரிகளை மனனம் செய்து ஒப்பித்தால் மட்டும் போதுமானது. அனைத்துப் பாடல்களுக்குமான (செய்யுள்களுக்குமான) பொருளானது மாணவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது பாடலின் பொருளை ஒப்புவிக்க வேண்டாம்.)
1. செய்ந்நன்றி அறிதல் (101-110)
1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது. தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
2. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப்பெரிதாகும்.
3. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
4. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
5. உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. கைமாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
6. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது; துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்;பை எப்போதும் விடலாகாது.
7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
8. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
9. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். முன் உதவி செய்தவர் பின்பு ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றைப் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
2.அடக்கமுடைமை (குறள்கள்121-130)
1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.
5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
8. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமற் போகும்.
9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
10. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. சினம் தோன்றாமல் காத்துக் கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- பாடல்களை ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 4 பயிலும் மாணவர்களுக்கான திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177013118447 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : திருக்குறள் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
தொடக்கநிலை நான்கு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பின்வரும் அதிகாரங்களைக் கொண்ட 20 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல்

தொடக்கப்பள்ளி வகுப்பு 5, 6 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான இரண்டு சுற்று கொண்ட போட்டி : போட்டி 1 திருக்குறள் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கதை கூறுதல், போட்டி 2 திருக்குறள் பாடல்களை மனனம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177537971465 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : போட்டி 1 திருக்குறள் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கதை கூறுதல், போட்டி 2 திருக்குறள் பாடல்களை மனனம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டி
தொடக்கிநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு வகையான போட்டிகள் இங்கே இடம்பெறுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்துப் பங்கேற்கலாம்.
போட்டி 1: திருக்குறள் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கதை கூறுதல்
இங்கே தரப்பட்டுள்ள பொறையுடைமை (குறள்கள் 151-160) என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள்களில் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கதை ஒன்றைத் தரமான பேச்சுத்தமிழில் பேசலாம். இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
பொறையுடைமை (குறள்கள் 151-160)
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல், மனத்துள் வைத்து மதிப்பர்.
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். வரம்பு கடந்து நடப்பவரின் வாயில்பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
(அல்லது)
போட்டி 2: திருக்குறள் பாடல்களை மனனம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டி
இங்கே தரப்பட்டுள்ள பொறையுடைமை (குறள்கள் 151-160) என்னும் அதிகாரத்தில் உள்ள திருக்குறள் பாடல்களை மனனம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டி. இதற்கு அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒப்பிக்கும்போது நன்கு மனனம் செய்திருத்தல், உரிய முறையில் சரியாக உச்சரித்து ஒப்பித்தல், பாடலின் பொருள் புரியும் வகையில் உயிரோட்டமிக்க வகையில் ஒப்பித்தல், பார்வையாளர்களைப் பார்த்துத் துணிச்சலுடன் ஒப்பித்தல் ஆகியன மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
பொறையுடைமை (குறள்கள் 151-160)
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல், மனத்துள் வைத்து மதிப்பர்.
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். வரம்பு கடந்து நடப்பவரின் வாயில்பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து (தொடக்க நிலை 5 மற்றும் 6 இரண்டு நிலைகளுக்கும் சேர்த்து) அதிக பட்சம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- இரண்டில் எந்தப் போட்டியில் பங்கேற்றாலும் அதற்கு அதிகபட்சமாக ஐந்து (5) நிமிடங்கள், தரப்படும்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
உயர்நிலைப்பள்ளி 1, 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேசும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177044688463 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : சிங்கப்பூர் என்ற நாடும் திருக்குறளும் என்ற தலைப்பில் கலந்துரையாடியபடி பேசும் போட்டி (இணையாக இருவர், பவர் பாயிண்ட் படவில்லைகளைப் பயன்படுத்திப் படைத்தல்)
மாணவர்கள் நாடு (குறள்கள் 731-740) என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒரு குறளையும் அதன் பொருளையும்‘சிங்கப்பூர் என்ற நாடும் திருக்குறளும்’ என்ற தலைப்பில் ஒப்பிட்டுத் தம் இணையாளருடன் தரமான பேச்சுத்தமிழில் அல்லது எழுத்துத்தமிழில் கலந்துரையாட வேணடும். தங்கள் பேச்சில் தாங்கள் தேர்ந்தெடுத்த திருக்குறளும் அதன் பொருளும் இடம்பெறும்வகையில் பேச்சை அமைக்க வேண்டும்.
இதற்கு அதிகபட்சமாக ஏழு (7) நிமிடங்கள் தரப்படும்.
அவர்கள் மூன்று முதல் ஆறு படவில்லைகள் வரை பயன்படுத்தலாம்.
இதை அவர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மற்றொரு நண்பருடன் இணைந்து படைக்க வேண்டும்.
நாடு
1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தரவல்லது நாடாகும்.
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே இருந்து வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.
7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.
8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து (உயர்நிலை ஒன்று மற்றும் இரண்டு) நிலைகளுக்கும் சேர்த்து அதிக பட்சம் நான்கு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். (இரண்டு இணைகள் என அவர்கள் அமைவார்கள்).
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- ஓர் இணைக்கு அதிகபட்சமாக 7 நிமிடங்கள் தரப்படும்
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில், நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயவு செய்து காத்திருக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திரு மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி (Mr Manickavasagam Chakravarthy) அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 இலும் திரு குருசாமி இசக்கிப்பாண்டியன் (Mr Gurusamy Isakkipandian) அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 இலும், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
திரு மு ஹரிகிருஷ்ணன் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
உயர்நிலைப்பள்ளி 3, 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேசும் போட்டி
போட்டி பதிவுக்கான இறுதி நாள் : வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணி |
போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177286372461 |
போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக் கிழமை, 16 மார்ச் 2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
போட்டி : எனக்குப் பிடித்த திருக்குறளும் என் கருத்தும் என்ற தலைப்பில் பொறையுடைமை என்ற அதிகாரத்திலிருந்து ஒரு குறளைத் தெரிவு செய்து அதைப் பற்றிய தம் கருத்தைத் தரமான பேச்சுத்தமிழில் விளக்கிச் சொல்லுதல்.
பின்வரும் பொறையுடைமை என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களில் ஏதேனும் ஒரு குறளின் கருத்தைப் பற்றி ஐந்து (5) நிமிடங்களுக்குத் தரமான பேச்சுத்தமிழில் பேசும் போட்டி.
பொறையுடைமை (குறள்கள் 151-160)
1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல், மனத்துள் வைத்து மதிப்பர்.
6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். வரம்பு கடந்து நடப்பவரின் வாயில்பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து ( உயர்நிலை மூன்று, நான்கு, மற்றும் ஐந்து ) நிலைகளுக்கும் சேர்த்து அதிக பட்சம் நான்கு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப்படிவங்களை வெள்ளிக்கிழமை, 28 பிப்ரவரி 2025 அன்று இரவு 11.59 மணிக்குள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
- போட்டிக்கு ஒரு மாணவருக்கு ஐந்து (5) நிமிடங்கள் தரப்படும்.

|