உறுப்பினர் பக்கம்

கதைகள்

சாகாத மரம்

மலர் மாணிக்கம்

ஒரு கிராமத்தில் விவசாயி விதைகளை விற்பனை செய்து வந்தார். ஒரு நாள் தன்னிடமிருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்து செல்லும் போது ஒரேயொரு விதை மட்டும் தவறி பாதையோரம் விழுந்தது.நாட்கள் செல்ல செல்ல மெதுவாக முளை விட்டு வளர ஆரம்பித்தது அந்த விதை.

அந்த வழியே சென்ற ஆடு மாடுகளின் கால்களில் மிதிப்பட்டு நசுங்கி போனது. மீண்டும் சிறிது நாளில் துளிர் விட்டு வளர ஆரம்பித்தது. மறுபடியும் கோழிகள் இரை தேட கிண்டிய போது அந்த துளிர் நசுங்கி போனது. இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு மீண்டும் வளர ஆரம்பித்தது. இனி நம்மை யாரும் அழித்து விட கூடாது என்று எண்ணிய விதை, விவசாயியை அழைத்து உதவி கேட்டது. அந்த செடியின் மீது இரக்க்ம் கொண்டு அதை பிடுங்கி தன் வீட்டுக்கு அருகில் நட்டு வள‌ர்த்தார் அந்த விவசாயி. ஆண்டுகள் பல சென்றன.செடி வளர்ந்து மரமானது.கோடைகாலத்தில் நல்ல நிழல் தந்ததது. விவசாயின் வீட்டிலுள்ள கழிவு நீரையெல்லாம் எடுத்து கொண்டது. சிறு குழந்தைகள் அந்த மரத்தடியில் விளையாடி மகிழ்ந்தனர். விவசாயி காட்டிய இரக்கத்துக்கு நன்றியாக அந்த மரம் அவர்களுக்கு உதவியது. ஒரு நாள் விவசாயி தன் வீட்டையும் நிலங்களையும் விற்று விட்டு நகர் பகுதிக்கு குடியேறினார். அந்த வீட்டை வாங்கியவர்கள் அந்த மரத்தை வெட்டி விற்று விட்டனர். இதனையறிந்த விவசாயி மிகவும் வருத்தப்பட்டார். ஒரு நாள் கடற்கரையில் அமர்ந்து கடல் அலைகளை ரசித்து கொண்டுருந்தார் விவசாயி. அப்போது அருகில் இருந்த படகு தன்னை அழைப்பதை உணர்ந்தார்.அதன் அருகில் சென்று பார்த்த போது அந்த படகு சொன்னது,' நான் இன்னும் சாகவில்லை, உங்கள் வீட்டு மரம் தான் இப்படி படகாக மாறியிருக்கிறேன்' என்றது.

 

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor