உன்னை வென்றிட போராடு
விதியென்றும் சதியென்றும் எதுவுமில்லை.
உன் மதிதன்னை வென்றிடவே
இவுலகில் சக்தி எதுவுமில்லை.
போராடும் உயிரினமே இவுலகில்
உயிர்வாழும் தகுதியை பேரும்.
போராடும் வரைதான் மனிதன்
போராட மறுப்பவன் சவம்.
இன்றைய இரவு நாளை
விடிந்து விடும்.
இன்றைய துன்பங்கள் நாளை
மடிந்து விடும்.
வெறும் காற்றைச் சுவாசிப்பதால்
மனிதர்கள் வாழவில்லை.
நம்பிக்கையைச் சுவாசிப்பதால்தான்
மனிதர்கள் வாழ்கிறார்கள்.
பூக்கும் வரைதான் பூ
கருகி விழுந்தால் சருகு.
காலம் உன்னை சோதிக்கச்செய்யும்
சோதனைதான் உன்னை சாதிக்கச்செய்யும்.
போராட்டமில்ல வெற்றி நிலைக்காது
போராட்டமில்ல வெற்றி இனிக்காது
உன்னை வென்றிட போராடு
உலகையே வெல்வாய் போராடு..